பக்கம்:புதையலும் பேழையும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 45.

வாய், கண், மெய், செவி, மூக்கு ஆகிய ஐந்து பொறி களையும் கொண்டது தலை. அவற்றுள் ஒன்று குறையினும் தலை குறையுள்ளதாகும். ஐந்தும் அமைந்துவிடுவதால் மட்டும் தலை நிறைவுடையதாகிவிடாது. ஒவ்வொரு பொறிக்கும் ஒவ், வொரு குறிக்கோள் உண்டு. ஐம்புலன்களே ஐம்பொறிகளின் குறிக்கோள்கள். சுவை, ஒளி, ஊறு, ஒலி, நாற்றம் என்னும் ஐந்து அறிவையும் முறையே குறைவில்லாது பெற்று ஐம்பொறி களும் அமையவேண்டும். அவ்வாறு அமையினும் தலை தன் இலக்கணத்தில் நிரம்பி நிறைவுடைய உறுப்பாகிவிடாது. கண் இருந்து பார்வை இன்றேல் குருடு என்னும் பழுதாகும். பார்வை யிருந்து அப்பார்வை கள்ளப் பார்வையாயின் குணமில்லாக் குறையாகும். இதுபோன்றே பிற பொறிகளும் அவ்வவற்றிற் குரிய குறிக்கோள்களை உடையனவாய்க் குணக்குறையற்று அமையவேண்டும். கோள், புலன் இல்லாத பொறிகளில் குணம் இராது. ஆகவே, கோள் இல்லாத பொறி போலக் குணம் இல்லாதது தலை ஆகாது. இவ்வாறு தலையின் இலக்கணத்தை எதிர் மறை முகமாக அறிவிக்கின்றது இக்குறள்.

முதன்முதலில் தலை’ என்னும் சொல்லைத் திருவள்ளுவர் ஆளும் இவ்விடத்தில் அதன் நேர் பொருளை அப்பொருளுக் குரிய இலக்கண நிறைவோடு காட்டியுள்ள திறம் நயக்கத் தக்கது.

("தலையின் இழிந்த மயிர் அனையர் (964)-என மற்றும் ஒர் இடத்தில் உறுப்பைக் குறிக்கும் பொருளில் தலை அமைந்துள்ளது.)

அடுத்துத் தலை தலை என்னும் சொல்லை, முளை “விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது’ (16) -என்னும் குறளில் தலையைக் காண்கின்றோம். இவ்விடத்தில் 'தலை’ என்னும் சொல் பசும்புல்லினது தலை என அமைந் துள்ளதால் முளை’ என்னும் பொருளைத் தருகின்றது. இது நேர் பொருள் அன்று ஆகுபெயராய்க் குறிப்பில் வந்த பொருள்.

மாந்தரது உறுப்புகளில் முதலில் தோன்றி உலகத்தை முதலில் கண்ட உறுப்பு தலை, புல்லின் முதல் தோற்றம் முளை.