பக்கம்:புதையலும் பேழையும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 51

தலைப்பெய்து :- தலையை மற்றொன்றில் வைத்தல் போன்று கற்றவர் கல்லா ஒருவனைக் கிட்டுதல் ஆகும். இஃது இயைபில்லாத சேர்க்கை, எனவே, இயைபு இல்வழிச் சேரல்' என்னும் பொருளைத் தருகின்றது.

'கூடி, பெய்து என்னும் ஒரளவான பொருள் ஒற்றுமை கொண்ட சொற்கள் சேர்ந்து தலை’ என்னும் சொல் அமைந்து தனித்தனிப் பொருள்களைத் தந்தமை போன்று, அடுத்தடுத்து, 'செல்லா', 'வந்த என்னும் எச்சவினைச் சொற்கள் சேர்ந்த தலை யைக் காண்கின்றோம்.

'தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து” (894) : 'தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து" (767)

இவற்றுள், முதற்குறள் அரசன் குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அக்குற்றத்தைத் தொடராதபடி ஒறுக்க வேண்டும்’ - என்னும் கருந்துடையது. எனவே, தலைச் செல்லா' என்பது தொடராத' என்னும் பொருளது. தலை ஐம்பொறிகளின் தொடர்பு அற்றுப் போகாமல் இயங்குவது என்னும் அடிப்படையோடு இப் பொருள் கிளைக்கிறது.

அடுத்த குறள் படைமாட்சி பற்றிய கருத்தைக் தலை - எதிர்வு கொண்ட்து இதிலுள்ள தலைவந்த' என்னும் சொல் எதிர்ந்த' என்னும் பொருளைத் தருவது. தலை, முன் நோக்கி எதிர்முகமாகச் செயற்படுவது. இந்த அடிப்படையோடு தலைவந்த' என்பதற்கு எதிர்த்த' என்னும் பொருள் அமைகின்றது.

அடுத்து,

'நிலைமக்கள் சால உடைத்தெனினுந் தானை தலைமக்கள் இல்வழி இல்' (770)

- என்னும் குறள் தலையைத் தாங்கி வருகிறது. தலைமக்கள் - தலைவர் - படைத் தலைவர் என்னும் பொருளைத் தந்து நிற்கின்றது. தலை, மேலி