பக்கம்:புதையலும் பேழையும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - புதையலும்

இவ்வாறே, நம் தமிழகத்தின் பண்டைக் கால மரபுகள்பழக்க வழக்கங்கள் பல, மேலைநாடு சென்று மெ ரு குட ன் மீண்டுள்ளன. மேலை நாட்டார் நம் மரபுகளைக் கேட்டு ஆர்வங்கொண்டனர்; வந்து கண்டு உவந்தனர்; தாமும் கடைப் பிடித்தனர். காலப்போக்கில் தம் நாட்டின் வழக்காக்கிக் கொண்டனர். தம் மரபாகவே கருதினர். நம்மிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டவை அன்னார் மூலமாக நம் நாட்டை அடையும் போது அவற்றின் நலத்தையும் பெருமையையும் நாம் ஒரு புதுமை யாகவே காண்கின்றோம். புதுமைக்குக் காரணம் அறிவியல் வளர்ச்சி என்பதை மறுக்க முடியாது. ஆனால், அப்புதுமைக்குள் நம் பழமை ஒளிந்துகொண்டிருப்பதை அறிவதில்லை. அப்பழக்கம் மேனாட்டாரது என்பதில் ஒருகவர்ச்சி. அவரைப்போன்று கடைப் பிடிக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை என்னும் நிலையில் அவற்றை மேற்கொள்கின்றோம். r

அவற்றுள் ஒன்று பிறந்த நாட் கொண்டாட்டம்.

இக்காலத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது என்பது மேனாட்டுப் பழக்கமாகவே கருதப்படுகின்றது. மேலைநாட்டுக் கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் நம் நாட்டவரும், மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுவோரும், சிறுபான்மையினராகப் பிறரும் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். மேலை நாட்டு மரபாகவே கருதி, அப்பாங்கிலேயே கொண்டாடுகின்றனர்.

நம் நாட்டு மரபாகக் கருதிக் கொண்டாடப்படுவதும் அற்றுப் போய் விடவில்லை; அருகிக் காணப்படுகின்றது.

பிறந்த நாள் பொதுவிழா.

ஒருவர் பிறந்த நேரத்திற்குரிய விண்மீனை அறிந்து அவ்விண்மீன் வரும் நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுதல் நம் நாட்டு மரபு. அந்நாள் அவ் விண்மீன் பெயரால் வழங்கப் படும். - *

இக்காலத்திலும், திருவனந்தபுரத்து மன்னர் ஒருவரது பிறந்தநாள் அவர் பிறந்த விண்மீனாகிய சுவாதி விண்மீனின் பெயரால் கவாதித் தி ரு நாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. அவர் யாத்த இசைப்பாடல்களும் 'சுவாதிப் பாடல்கள்’ எனப்படுகின்றன. . . . -