பக்கம்:புதையலும் பேழையும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 61

தஞ்சாவூர் மாமன்னன் முதல் இராசராசன் பிறந்த நாள் அவன் பிறந்த விண்மீனாம் சதயத்தின் பெயரால் சதயத் திருவிழா' வாகக் கொண்டாடப்படுகின்றது. சங்க காலப் பாண்டியன் ஒருவனது பிறந்த நாள் உத்திராட விண்மீன் கொண்டது. அந் நாளில் அவனது விழா நிகழ்ந்தது.

கடவுளர்க்கும் பிறந்த நாள் விண்மீனைப் படைத்து விழா காணப்பட்டது. திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக் கும், திருவோனத் திருநாள் திருமாலுக்கும், கார்த்திகைத் திரு நாள் முருகனுக்கும் கொண்டாடப்படுகின்றன.

“... ... ... கபாலீச்சுரம் அமர்ந்தான்

ஆதிரைநாள் காணாதே போதியோ' -எனச் சிவனது பிறந்த நாள் விழாவைத் திருஞானசம்பந்தர் குறிக்கின்றார்.

'கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஒண நன்னாள்” -என்று மாங்குடி மருதனார் திருமாலின் ஒன விண்மீன் விழாவைக் குறித்தார். அவ்விழாவும்,

'ஒண விழாவின் ஒலி அதிர' -என்னுமாறு ஒலி முழக்கத்தோடு நிகழ்ந்ததைத் திருமழிசை

யாழ்வார் காட்டுகின்றார். -

ஆடிக் கார்த்திகைத் திருவிழா முருகன் பெயர் சொல்வ தன்றோ?

கடவுள் அடியார்க்கும் இவ்விழா அமைந்தது. இராமாநுசர் பிறந்தது சித்திரைத் திருவாதிரையில். இதனை, மணவாள மாமுனிவர் என்பார், 'இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்ததிரு வாதிரைநாள் என்றையினும் மின்றிதனுக் கேற்றம் என்ன”

-என்று வினா எழுப்பி,

1 ஞான. தே ! மயிலாப்பூர் : 4 2 மது. கா : 590, 591 8 நான் முகன் திருவந்தாதி : 41