பக்கம்:புதையலும் பேழையும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 65

இப்பிறந்த நாள் ஒருவர் பிறந்த விண்மீன், ஆண்டிற்கு ஒருமுறை வரும்போது கொண்டாடப்படுவது பெருவிழாவாகும். அவ்விண்மீன் திங்களுக்கொருமுறையும் வரும் அன்றோ? அந் நாளிலும் பெருவிழாவாக அன்றிச் சிற்றளவில் கொண்டாடப்படும். அச்சிறு நிகழ்ச்சி மங்கலநாள் நிகழ்ச்சி' எனப்படும். ஆண்டிற் கொருமுறை கொண்டாடப்படும். பெருவிழா 'பெருமங்கலம்’ எனப் படும். பெருமை என்னும் அடைமொழி பெற்றதுகொண்டே இவ் விழாப் பெருமையை உணரலாம்.

இதனை,

'பெருமங்கலம் என்றதனானே பக்க நாளும் திங்கள்தோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாதன உணர்க' '

- என்று நச்சின்ார்க்கினியர் எழுதிய விளக்கம் அறிவிக்கின்றது. இவ்விளக்கம் கொண்டு திங்கள்தோறும் வரும் பிறந்த நாளும் இலக்கியங்களில் பாடப் பெறாவிட்டாலும் கவனத்திற் கொள்ளப்பட்டது என்பதோடு, ஆண்டுப் பிறந்த நாளுக்கு முன், பின் நாள்களும் விழா நாள்களா யின என்பதும் தெரிகின்றன.

இலக்கியங்கள் காட்டும் பிறந்த நாள் பெருமங்கல நிகழ்ச்சி களும் கல்வெட்டுகள் காட்டும் நிகழ்ச்சிகளும் தமிழகத்தில் இஃதொரு பெருமரபாகத் தொடர்ந்து நிகழ்ந்ததை அறிவிக் கின்றன. -

இனிப் பிறந்த நாளைக் குறிக்கும் பிற சொற்களைக் காணலாம்.

வெள்ளணி நாள்.

மங்கல நாள்களில் பிறந்த நாள் பெருமைக்குரிய மங்கல நாள் என்னும் கருத்தில் பெருமங்கலம்' எனப்பெயர்பெற்றது.

1 தொல் : பொருள் : 91 உரை,

பே, 3