பக்கம்:புதையலும் பேழையும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புதையலும்

மாந்தர் தாம் பிறந்த விண்மீனிற் பெயர் பெற்றமை போன்று பிறப்பும் இறப்பும் இல்லாதவர் எனப்பட்ட கடவுளரும் தமக்கென விண்மீன் படைக்கப்பெற்று அதனாற் பெயர் பெற்றனர்.

'ஆதிரையான் ஆதிரையான் என்றே அயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு" என முத்தொள்ளாயிரம் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமானை "ஆதிரையான்’ என்ற பெயரிட்டுக் காட்டியது. உலகமே அப்பெயரைச் சொல்லி அயரும் என்றது. பெரியாழ்வார் பாடல்,

  1. ,

வோணத்தான் உலகாளும் என்பார்களே' -எனத் திருமாலை ஒனத்தான்' பெயராக்கியது. -

பிறந்த நாள் தகுதி.

தமிழ் மக்கள் தம் வாழ்வியலில் பிறந்த நாளுக்குத் தனித் தகுதி ஒன்றை வைத்திருந்தனர். எந்நாளினும் பிறந்த நாள் சிறந்தது. அந்நாளில் பெருநலச் செயல்கள் செய்யவேண்டும் என்பது தமிழர்தம் கொள்கை.

'எந்தப் பகலையும்விட, பிறந்தநாள் பகல் சிறந்தது. அன்று மன்னனது வெண்கொற்றக் குடை அருளின் சின்னமாக மிளிரும். மக்கள் அக்குடையினைப் பாடுக 12 - என்பதாகச் செயங்கொண்டார் குலோத்துங்க சோழன் பிறந்த நாளைப் போற்றினார்.

சீவக மன்னன் மிக இளமையிலேயே போர் மேற்கொண்டு தன் பகையை வென்றான் ‘ன்பதைக் குறிக்கும் திருத்தக்க தேவர், بسسسسسسسس مسمبسسسسسسسععمسيس سيسمصمم معيسويه

பெரி. திரு : வண்ண மாடங்கள் : 8, 2 எற்றைப் பகலினும் வெள்ளணிநாள்

இருநிலப் பாவை நிழலுற்ற கொற்றக் குடையினைப் பாடிரே!

குலோத்துங்க சோழனைப் பாடிரே!

-கலி, ; ப. களம்பாடியது : 62.