பக்கம்:புதையலும் பேழையும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையலும்

o

Ö

என்றொரு மன்னன் பல குறுநில மன்னர்களை வென்று சிறை வைத்திருந்தான். அவனுடைய பிறந்த நாள் வந்தது. யாவரும் சிறை விடு பெற்றனர். அன்னவர் யாவரும் மன்னனது பிறந்த விண்மீனை வாழ்த்திச் சென்றன. இஃதொரு பழம்பாடற் கருத்து

முத்தொள்ளாயிரம்,

தேர்வேந்தன் தென்னன் திருஉத்தி ராடநாள் போர்வேந்தன் பூசல் இலன்'

-என்று மன்னன் போர் ஒழித்ததைக் கூறுகின்றது. போர் நிறுத்தம் என்றால் எத்துணை உயிர்க்கொலைகள் நின்றிருக்கும்? அத்துணையும் நன்மை யன்றோ

இவ்வாறு உண்மைப் போர் ஒழிந்தாலும் பொய்ப்போர் அன்று நடந்தது. அஃதென்ன பொய்ப்போர்? விளையாட்டுப் போட்டியைப் போர் என்றனர். பொதுமக்கள் வாழும் சேரியில்? மன்னன் பிறந்த நாள் விழாவை ஆர்வத்துடன் போட்டி விளையாட்டாகக் கொண்டாடினர்.

பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்

சேரி விழவின் ஆர்ப்பெழுந் தன்று'

-நன்னனது பிறந்த

நாள் சேரியினரால் ஆரவார முழக்கத்தோடு கொண்டாடப் பட்டுள்ளது.

கடவுளர்க்கு நடத்தப்படும் பிறந்தநாள் விழாவிலும் இச்சேரி விழாவும் சேரிப்போரும் நிகழும். விளையாட்டுப் போரென்றாலும் வீரத்துடன் நிகழும். போரில் புண்பெற்று வடுப்பெறுதலும் உண்டு.

மக்களது மகிழ்ச்சி நன்மையோடு வேறு நிலைத்த நன்மை களும் பிறந்தநாள் விழாவால் பிறந்தன. அந்நாளில் மன்னர் நல்ல அறக்கட்டளைகளை ஏற்படுத்துவர். . -

தெம்பியன்மாதேவி என்னும் சோழகுல அரசி தன். பிறந்த நாளிலும், தனது ஐந்து மருமகளாரது பிறந்ந நாள்களிலும்

1 தொல் : பொருள்: மேற்கோள் பழம்பாடல் 2 மது. கா: 618, 619,