பக்கம்:புதையலும் பேழையும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர்

வாழ்விடம்.

புள்ளிகளை நிரப்பலாம்.

திருவள்ளுவப் பெருந்தகை தோன்றி இவ்வாண்டு வரை 2013 ஆண்டுகள் நிகழ்ந்துள்ளன. இக்காலக் கணிப்புக்கு அடி கோலியவர் நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார். இப்போது உலகில் ஏசு கிறித்துவின் பிறப்பு நாளை வைத்தே காலக்குறிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அக்கால எல்லைகொண்டு நோக் கினால் வள்ளுவனார் காலம் கி. மு. 31 என்றாகின்றது. இஃது அடிகளாரது கணிப்பு. தமிழ்ப் பேரறிஞர்கள் இம்முடிவை ஏற்றுள் ளனர். எனவே, வள்ளுவப் பெருந்தகையின் கால எல்லை ஏறத் தாழ வகுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இப்பெருந்தகையரது வாழ்வியற் கதைகள் இன்றும் உலவு கின்றன. எனினும், அவை ஆணிவேர் அற்றவையாகவே உள்ளன.

இப்பெருமகனார் வாழ்ந்த இடம் ... ... ... ... ... புள்ளி களைத்தான் இட முடிகின்றது. வாழ்ந்த இடம் புள்ளிகளைத்தான் பெறுகின்றதென்றாலும் முற்றுப்புள்ளியைப் பெறவில்லை. புள்ளி களை நிரப்ப முயலலாம்.

தொன்மைச் சான்றோரது காலத்தையோ வாழ்ந்த இடத்தை யோ அறிய இன்றியமையாத சான்றுகள் வேண்டும். தொல்புதை