பக்கம்:புதையல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் ல் 1 வெள்ளியம்பலம், தன் தோட்டத்துக்குள்ளே உலவியபடியிருந்தார். அவருடைய கண்கள் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தன. அப்போதுதான் இரவு உணவை முடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அடிக் கடி வெளியான பலமான ஏப்பங்கள் அறிவித்துக் கொண் டிருந்தன. தோட்டத்தின் திறந்த வாசலிலே யாரையோ எதிர்பார்த்து அவர் கண்கள் அலைவது நன்றாகப் புரிந் தது. கறுத்த மேனியும், கம்பீரமான தோற்றமும், பயங் கரமான மீசைகளும் உடைய வெள்ளியம்பலம், கையிலே யும் ஒரு அழுத்தமான தடியை வைத்திருந்தார் என்றால் கேட்கவேண்டுமோ? அவருடைய கழுத்திலே யிருந்த மெல்லிய தங்கச் சங்கிலியும், அதிலே தொங்கிக் கொண் டிருந்த தாயத்தும் நிலவின் மங்கலான ஒளியிலே மின்னிக் கொண்டிருந் தன. அடிக்கடி கனைத்துக்கொண்டு வேங்கை போல தலையை நிமிர்த்தி கண்களையும் சுழற்றிக் கொண்டு அலைந்த வெள்ளியம்பலம் மருங்கப்பள்ளம் வட்டாரத்திலே ஒரு பெரிய புள்ளி. பண வசதியிலே என்று கூறிவிட முடியாது; படை வசதியிலே தான்! அம்பலம் வருகிறார் என்றாலே போதும்; அந்த வட்டாரத்து மக்கள் அச்சத்தை அணைத்துக்கொண்டு, ஆளுக்கொரு மூலைக்கு போய் விடு வர் ஊரிலே நடைபெறும் நல்லது கெட்டது அனைவற் றிலும் அம்பலம் இல்லாமல் இருக்க மாட்டார். யார் வீட்டி லாவது விசேஷ மென்றால், இவரே அந்த விசேஷக் காரனாக மாறி காரியங்களை கவனிப்பார். அவன் மீதுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/13&oldid=1719257" இலிருந்து மீள்விக்கப்பட்டது