பக்கம்:புதையல்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 203 மாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. நாலைந்து ஆண்டு கள் உருண்டன. என் சிந்தையில் அழியாத சித்திரமாக விளங்கிக் கொண்டிருந்த பரிமளாவை எப்போது சந்திப் போம் என்று ஏங்கிக்கொண்டேயிருந்தேன். கம்பெனி முத் லாளி விஷ்ணுமூர்த்தியும் திடீரெனக் காலமானார். கம் பெனியின் முழுப் பொறுப்பும் என் தலையில் விழுந்தது. நடிக நண்பர்களின் ஒத்துழைப்போடு, புதிய நாடகங்கள் தயார் செய்தோம். 66 ய - வள்ளித் திருமணத்திற்கு பிரிவுபசாரம் வாசித்து விட்டு, வாடிடும் ஏழை " என்ற நாடகம் நடித்தோம் நல்லதங்காள், சாவித்திரி, அரிச்சந்திரா, பிரகலாதா எல் லாம் சீந்துவாரற்றுப் போயின. என் எண்ணங்கள் நாடக மாயின. புதிய புதிய கருத்துக்களை நாடக மூலம் சொன் எதிர்ப்பு அதிகம் அது போலவே ஆதரவும் நினைத்தவைகளை மக்களிடம் சொல்ல முடி னோம். வளர்ந்தது. - - - ஆயி கிறதே என்ற மகிழ்ச்சியால் ஆறுதல் பெற்றேன் னும் என் ஆருயிர் மோகினியை சந்திக்கத் துடித்தேன் -சந்தித்தேன் -இருவரும் ஒன்றுபட்டோம். பர்.மளாவை நான் புரிந்து கொண்டேன். பட்டுக்கோட்டை பள்ளிக் மருங்கப்பள்ளம் கிராமம் கூடம் - கின்ற அடையாளங்களால்! - தாண்டவன் என் ஆனால் அனாதையான என்னை அவள் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் காதலரானோம். பெரிய வரே! உம்மையும் சந்தித்தோம். உமது புதிரைப் புரிந்து கொள்ளத்தான் போலீஸ் உடையிலே வந்தோம். போலீஸ் உடை எங்கள் நாடகக் கம்பெனி உடையாக்கும்; அவ் வளவுதான் எங்கே பெரியவரே! என் கதை முடிந்தது; என்றான் துரை. அவன் - - உமது கதையை ஆரம்பிக்கலாம் சொல்லி முடித்ததுதான் தாமதம்; மாயாண்டிக் கிழவர் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/205&oldid=1719470" இலிருந்து மீள்விக்கப்பட்டது