B - புதையல் 211 - பெற்ற பாடம், குமாரவடிவின் வயிற்றுக்கு உதவி புரிந் தது. மருத்துவ குமாரவடிவின் பாதையிலே ஒரு புதிய திருப்பத்தை அளித்தது மருங்கப்பள்ளம் கிராமம் ஆமாம் துரை! - உன்னுடைய தங்கை மண்ணோடு கலந்து கிடக்கிறாளே; அந்த மருங்கப்பள்ளம் தான் உன் தந்தை யின் பாட்டையையும் மாற்றியது என்கிறேன்! எழுபது கோடி பசும் பொன் மறைந்து கிடக்கிற இடம் மருங்கப் பள்ளம். எழுபது கோடி இல்லாவிட்டாலும்; ஏதோ கொஞ்சமாவது இருக்கத்தான் வேண்டும். அந்தப் புதை யலைத் தேடி யார் யாரோ அலைகிறார்கள் என்பது உண்மை தான். குழந்தையை பலி கொடுத்து கொடுமை புரிகிற அளவுக்கு ஒரு சாமியாருக்குப் பொன்னாசை வளர்ந் திருக் கிறதென்றால்; மற்றவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? நடுக் கடலிலே எங்கள் தோணியை நீ வழி மறித்தாயே, அந்தத் தோணியிலிருந்த ஐயப்பன் என்ற முரட்டுப் பட கோட்டி கூட அந்தப் புதையலுக்காக நாக்கைத் தட்டிக் கொண்டிருப்பவர்களிலே ஒருவனாவான். ஐயப்பனை போலவே பலர் அந்தப் புதையலை சாப்பிட பல் துலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய புதை யலைப் பற்றிய ரகசியம் அதை எடுக்கக் கூடிய வழி - அனைத்தும் அடங்கிய ஒரு செப்பேடும் - - ஒரு சிறு கல் லும் உன் தந்தையிடம் கிடைத்து விட்டது. - "கிடைத்து விட்டதா? புதையலைப் பற்றிய குறிப்பா? எப்படி?” என்று துடிப்போடு கேட்டான் துரை. “பொறு - சொல்லுகிறேன்! " என்று கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் கிழவர். 66 கனைத்துக் புதையலை எடுக்கும் வழியும் வகையும் கிடைத்து விட்டது - அதை எடுத்து என்ன செய்வது? யாருக்காக -
பக்கம்:புதையல்.pdf/213
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை