பக்கம்:புதையல்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 66 மு. கருணாநிதி துரை! புண்ணுக்கு மருந்து கேள்; தருகிறேன். அதை வேலால் குத்தும்படிச் சொல்லாதே; என்னால் முடி யாது!” என்றார்! 66 என்ன பெரியவரே, சொல்கிறீர்கள "நீ என்னிடம் எழுதிக் காட்டிய உல் க் காட்டிய உ வாழ்க்கைச் சித் திரமே ஒரு சோகப் பெருவெள்ளம் நான் வேறு வறு உன் அப்பன் செத்த கதையைச் சொல்லி, சோகத்தை இரு மடங்காக்க க வேண்டுமா? வேண்டாம்--உன் தந்தை குமார வடிவு இறந்துவிட்டான்; அதோடு விட்டுவிடு! ” 66 ம - இது என்ன பெரியவரே, போர்க்களத்திலேயிருந்து வீரனுடைய குடும்பத்திற்கு சாவுச் செய்தி வருமே அது போல முடிவை மட்டும் ஒரு வரியில் கூறுகிறீர்களே! 66 ஆமாம் குமாரவடிவின் வாழ்க்கையும் ஒரு போர்க் களந்தானே! ஆனால், அவன் வீரகை நின்று சமர் புரிய வில்லை; கோழை போல உலகத்துக்குப் பயந்து, ஒதுங்கி ஒதுங்கி நடந்து, கடைசியில் பண்மாகப் போனான். ” 66 தயவு செய்து என் தந்தை இறந்த விபரத்தைச் சொல்லுங்கள்! அப்பா மாண்டது, மகனுக்கும் தெரியாத ஒரு மர்மச் சுழலாகப் போய்விட வேண்டாம். நான் கவலைப் படுவேன் என்று எண்ணாதீர்கள். என் குடும்பத்திலே நிகழ்ந்த துன்பத் தொடர்கதையின் ஒவ்வொரு அத்தியா யத்தையும் படித்தவன தான் நான். தாயார், பாட்டி, தங்கை மூவரையும் பிணயாகப் பார்த்தவன் நான். அதனால் மனம் மரத்துப் போய்விட்டது. தந்தை இறந்த விபரத்தை நீங் கள் தைரியமாகச் சொல்லலாம். ” "கேட்க நீ தயாரி! சொல்ல நான் தயாராகிக் கொள் வது கஷ்டமாயிற்றே! குமாரவடிவின் மகன் நீ. நான் அவ னுக்கு நண்பன். சிறையிலும் வெளியிலும் அவனும் நானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/216&oldid=1719485" இலிருந்து மீள்விக்கப்பட்டது