218 மு. கருணாநிதி "அப்படியானால் என்னையும் நீ குறிப்பிட்ட அந்த நடுத் தெருக் கும்பலோடு சேரச் சொல்லுகிறாயா, துரை? ” எழு 66 என் அப்பாவைப் பற்றி உங்களை ராமாயணம் தச் சொல்லவில்லையே நான்; தந்தையைப்பற்றி மகனிடம் கூறுவதிலே தவறொன்றுமில்லையே; அதுவும் முழுக் கதை யுமா நான் கேட்கிறேன். முடிவு அத்தியாயத்தை மட்டும் சொன்னால் போதும் என்கிறேன்." 66 வீடு விழுந்தது என்பதற்கும், வீடு எரிந்தது என்ப தற்கும் வித்தியாசமிருக்கிறது. விழுந்தாலும்,எரிந்தா லும்-வீடு வீணாவது உண்மைதான். ஆனால், வீடு விழுந் தது என்கிறபோது, ஏதோ பழைய வீடு காற்றிலோ ழையிலோ விழுந்துவிட்டது என்று கூறி விடலாம்; வீடு எரிந்தது என்கிறபோது எப்படி எரிந்தது? ஏன் எரிந் தது? வேண்டுமென்றே யாராவது கொளுத்தினார்களா? அல்லது அடுப்பிலேயிருந்த நெருப்பு காற்றில் பரவி விட் டதா? இரவிலே விளக்கின் சுடர் தெறித்து ஓலையிலே பிடித்து வீட்டை அழித்ததா - இப்படிப் பல கேள்விகள் பிறக்கும். விழுந்ததை விட, எரிந்ததற்கு கேள்விகள் அதிகம். தொடர்புடைய சம்பவங்களும் அதிகம். குமார வடிவின் சாவு எரிந்ததைப் போன்றது. தொடர் டைய சம்பவங்கள் அதிகம் கொண்டது. அவைகளைச் சொல்லா விட்டால் சாவின் விபரத்தை நீயும் அறிந்துகொள்ள இய லாது. அவைகளைச் சொல்லவும் எனக்குக் கஷ்டமாயிருக் கிறது!' — கடைசியாகக் கேட்கிறேன்; சொல்லப் போகிறீர் களா, இல்லையா?" (6 து ஏது வம்பு! அதான் சொன்னேனே; பாம்பு கடித்து இறந்துவிட்டான் என்று! ”
பக்கம்:புதையல்.pdf/222
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை