புதையல்
219
⟨ “சிவன் கோயில் பாம்பு என்றீர்களே; சிவன் கோயிலுக்கு அப்பா ஏன் போனார்?”
“சுவாமி தரிசனத்திற்காக!”
“அப்பா கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதே திடையாதே; உள்ளமே கோயில் என்று அவர் டைரியில் எழுதி வைத்திருக்கிறாரே”
“அவன் சாமி கும்பிட்டதை நான் பார்த்தேனே—சிறையிலிருந்து வந்த பிறகு, தெய்வ பக்தி அதிகமாகி விட்டது அவனுக்கு!”
“ஆகியிருக்க முடியாது! ஒரு குற்றமும் செய்யாதவரை, சிறையிலே மூடும் போது, பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பாழுங் கடவுள் மீது அவருக்கு பக்தி ஏற்பட நியாயமில்லை!”.
“பக்தி ஏற்படாமலா பாதி ராத்திரியிலே கோயிலுக்கு ஓடினான்…”
இதைச் சொல்லி விட்டு கிழவர் திணறினார். தடுமாறினார். அவர் நாக்குழறிற்று,
“என்ன, பாதி ராத்திரியிலா?” என்று துரை ஆவலோடு கேட்டான். கிழவர் கனைத்துக் கொண்டார். மனதை திடப்படுத்திக் கொண்டு, பேசத் துவங்கினார். உண்மைகளைச் சொல்லி விடலாம் என்ற உறுதி பிறந்து விட்டது அவருக்கு என்பது அவரது முக பாவத்திலேயிருந்து தெளிவாகத் தெரிந்தது.
“துரை! எவ்வளவுதான் மறைத்தாலும் விட மாட்டேன் என்கிறாய்; பரவாயில்லை. இந்தப் பரம ரகசியத்தை நீயும் பரிமளாவும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் வெளியிடுகிறேன்.”⟩