புதையல் - 33 அது உண்மை அழிந்தாலும் கவலையில்லை-நான் வீணாக அழிக் கப்பட்டு, அந்த உண்மை, உலுத்தர்கள் கையிலே சிக்கி விட நான் அனுமதிக்க மாட்டேன். அதற்குத்தான் இந்த நாட்டை விட்டே வேறு நாடு ஓடுகிறேன். யாராவது என் மனம்போல ஒரு மனிதன் கிடைப்பானேயானால்-அவனி டம் அந்த உண்மையை ஒப்படைத்துவிட்டு, சாவை கட்டிப் பிடித்துக் கொள்வேன். என் சாவுக் கண்ணீரை நன்மையின் மீது அபிஷேகிப்பேன்! நான் எடுத்துக் கொண்ட பெரிய முயற்சியில் நீங்கள் எப்படியோ குறுக்கே வந்து விட்டீர்கள். வேண்டுமென்று வரவில்லை தெரிகிறது! ஆனாலும் என் தற்காப்புக்காக உங்கள் எதிரியாகிவிட்டேன் நான். சென்று வருகிறேன், என்னை மன்னித்து விடுங்கள்! தயவுசெய்து இங்கு நடந்த இந்த சம்பவத்தை மறந்து விடுங்கள். யாரோ ஒரு கிழப்பயல்- பொக்கை வாய் திறந்து பொய்யும் புளுகுமாக உளறினான் என்று நினைத்துக்கொண்டு -உங்கள் காதல் காரியத்தில் ஈடுபடுங்கள் ! அ'ேதா அந்த வாலிபன் அழகானவன் தான்- நல்லவனாயுமிருக்கிறான். ஆனால் அவன் காதல் வலையில் சிக்கியவனாயிற்றே-காதலர்களை எனக்குப் பிடிக் கவே பிடிக்காதே! அவர்களை நம்பி நான் எப்படி இந்தப் பெரிய காரியத்தை ஒப்படைப்பது! கூடாது கூடாது! நான் வருகிறேன் - வாழப்பிறந்த காதலர்களே! உங்களுக் காகத்தான் சரபோஜி மகராஜன் இந்த சல்லாப மண்ட பத்தை கட்டிவைத்திருக்கிறான் என்று எண்ணிக்கொண்டு கேளிக்கை நடத்துங்கள்! அவன் ஏன் இதைக் கட்டினான் என்று உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமென் இருக்கிறது. — கிழவர் இப்படி - தன் மனம் போன போக்கில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது பேச்சின்
பக்கம்:புதையல்.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை