40 மு. கருணாநிதி "எப்பா! ஐயப்பா! கொஞ்சம் பேசாமத்தான் இரேன்!" கிழவர் சற்று வெறுப்புடன் கூறினார். உடனே அந்த கிழவரைப் விகார ரூபக் கிழவன்; ஆம் - ஐயப்பன் - பார்த்து ஒரு சிரிப்பை வெளியிட்டான். அந்த சிரிப்பிலே வரட்டுத்தனம் பளிச்சிட்டதே தவிர வேறெந்த அர்த்தமும் காணப்படவில்லை. நோக்கி வந்தபடியே ஐயப்பன், "ஓய் வேதாந்தி! என்ன SAMM ஓ முடங்கிக் கொண்டிருந்த கிழவரை கூச்சல் போடுறே? என்னய்யா சேதி? ஆங்? என்று குறும்பாகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு அசட்டுத்தனமாகக் கத்தினான். வேதாந் தியல்லப்பா என் பெயர் ! மாயாண்டி... என் பெயர். "கிழக் குறும்பு மட்டும் உமக்கு விடாதய்யா!” என்று சிரித்தபடி அருகே ஒரு மூட்டையில் அமர்ந்தான் ஐயப்பன். ந "நீ நல்ல வாலிபன் என்பது உனது நினைப்பு போலி ருக்கிறது" என மெதுவாகச் சொல்லிக்கொண்டு, கிழவர் அசதியை உதறிக் கொண்டார். சிறிது நிமிர்ந்து உட் கார்ந்தார். "இப்போதே இப்படி தவிக்கிறீரே அய்யா! - பாக்கி தூரம் எப்படிப் போய்ச் சேருகிறது. செத்துடுவீரா வழியிலேயே ?' ஐயப்பனின் இந்தக் கிண்டலிலே - கிழவனின் சிந்தனை சிறிது நேரம் மிதந்தது. "செத்து விட்டால் என்ன; நல்லதுதான்! கடலில் செத்தால் மீன்களுக்காவது இந்த உடல் ஆகாரமாகக் கிடைக்கும் -
பக்கம்:புதையல்.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை