பக்கம்:புதையல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 43 மகன் சயந்தன் காக்கை உருவமெடுத்து, சீதையின் அங் கத்தை சுவைத்துப் பார்த்தான்; அதனால் கோபங் கொண்ட ராமர், அருகம்புல்லை அம்பாக்கி - சயந்தனின் கண்ணைக் குத்தினார் - அது முதல் காக்கை குலத்திற்கே ஒரு கண் இல்லை என்று புனைந்துரை ஓவியம் தீட்டி விட்டார்கள்! அணிலின் முதுகிலே வெளுத்துப்போன வானவில் லைப்போல கோடுகள் இருக்கின்றன என்பது உண்மை! அந்த உண்மைக்கு உரைக்க வந்த விளக்கம் தான்; ராமர் அணிலைத் தடவிக் கொடுத்தபோது விழுந்த விர லின் அடையாளங்கள் என்ற கட்டுக்கதை! அனுமார் களோடு சேர்ந்து கொண்டு அணிலும் பாலம் கட்டிய தாம் - அதனால் அதை ராமர் பாராட்டினாராம்! இப்படி யெல்லாம்; கண்ணுக்குத் தெரிந்த உண்மைகளை வைத் துக் கொண்டும்-கண்ணுக்குத் தெரியாத கற்பனைகளை வைத்துக் கொண்டும் அமைத்துக் கொண்டும் - - யூகங்களை அடிப்படையா எழுந்த கதைகள் ஏராளம்! ஏராளம்! அதிலும் கேட்பதற்கு உன்னைப்போல ஏமாளி கள் இருந்தால் பிறகு சொல்லவா வேண்டும்- ஏமாற்று கிறவனுக்கு வேட்டை தான் !” 66 அப்படின்னா - துறவனா?" கதை சொல்றவன் எல்லாம்--ஏமாத்

-

"எல்லோரும் அல்ல; கதைக்காக கதை சொல்லுகிற வர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றுவதற்காகவே கதை சொல்கிறவர்களும் இருக்கிறார்கள் - ஆனால், மருங்கப் பள்ளத்துக் கதையிருக்கிறதே; அதை நம்பி பலர் ஏமாந் திருக்கலாமே தவிர, ஏமாற்ற வேண்டுமென்பதற்காக யாரும் இயற்றிய கதையாக இருக்க முடியாது! ஆழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/45&oldid=1719293" இலிருந்து மீள்விக்கப்பட்டது