பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32. உபாஸ்கர்கள் ஒருவன் புறத்திலே நகைகள் அணிந்திருந்தாலும், அவன் மனம், புலன்களை வெற்றி கொண்டிருக்க முடியும். வெளித்தோற்றம் தரும வாழ்க்கை அன்று. அது உள்ளத்தைத் தீண்டாது. சிரமணன் சிவர ஆடையைப் புனைந்துகொண்டே, உலகப் பற்றுக்களில் ஆழ்ந்திருக்கவும் முடியும். '

  • *

ஏகாந்தமான வனங்களிலே தங்கியிருந்தும், ஒருவன் வையகத்தின் ஆடம்பரங்களை விரும்பினால், அவன் உலகப் பற்றில் ஆழ்ந்தவனாவான்; உலகத்தாரைப் போல உடைகள் அணிந்த ஒருவன், தன் இதயத்தை வான மண்டலத்திலே பறக்கவிட்டு, உன்னதமான சிந்தனைகளை மேற்கொள்ளவும் கூடும். '

துறவியும் இல்வாழ்வோனும், நான் என்ற அகங்காரத்தை விட்டு விட்டால் இருவர்க்குள்ளும் பேதமேயில்லை. ' Wr of இல்வாழ்வோர்களே சிறந்த ஒழுக்கத்தைப் பேணாத ஒருவன் அடையும் நஷ்டங்கள் ஐந்து வகையானவை. முதலாவதாக, ஒழுக்கமில்லாததால், அவன் மடிமையில் ஆழ்ந்து மிகுந்த வறுமையை அடைகிறான்; அடுத்தாற்போல், அவனைப் பற்றிய இகழ்ச்சி எங்கும் பரவி விடுகின்றது; மூன்றாவதாக, அவன் பிராமணர்கள், கூத்திரியர்கள், குடும்பத் தலைவர்கள், சிரமணர்கள் ஆகிய எவர்களுடைய கூட்டத்திற்குச் சென்றாலும், அவன் வெட்கமும் கலக்கமும் அடைகிறான்; நான்காவதாக, அவன் மரிக்கும்போது கவலை நிறைந்தே மரிக்கிறான்; கடைசியாக, மரணத்திற்குப்பின் உடல் அழிவுற்றதும், அவன் மனம் துயர நிலையிலேயே இருக்கும். அவனுடைய கருமம் எங்கே தொடர்ந்து சென்றாலும், அங்கே துக்கமும் துயரமும் இருக்கும். கிருகஸ்தர்களே, இவையே தீவினையாளன் அடையும் ஐந்து வகை நவுடங்கள்!

  • *

" மனிதன் மரித்த பின்பு அவன் மனம் சம்பந்தமான விஞ்ஞானக் கந்தத்தின் நுண்ணிய பகுதி ஒன்று எஞ்சியிருந்து அடுத்த பிறவிக்குக் காரணமான வினைப்பயனை ஏற்கும் என்பது பெளத்த தருமக் கொள்கைகளுள் ஒன்று. 70 புத்தரின் போதனைகள்