பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 / புத்தரின் வரலாறு

தாங்கள் வணக்கம் செய்யாமல் தமது குமாரத்திகளையும் வணக்கம் செய்வித்தார்கள். குமாரர்களையும்

அவர்களுடைய எண்ணத்தை அறிந்த பகவன் புத்தர், தமது இருத்தியினாலே மண்ணிலிருந்து கிளம்பி ஆகாயத்திலே நின்றார். இதனைக் கண்ட சுத்தோதன அரசர் “உத்தமரே! நீர் பிறந்த நாளிலே அசித முனிவரை வணங்க உம்மை அழைத்துவந்தபோது உமது பாதங்கள், முனிவர் சிரசில் பட்டதைக் கண்டு நான் உம்மை வணங்கினேன். அது என்னுடைய முதலாவது வண்க்கம். வப்பமங்கல விழாவிலே நாவல்மரத்தின் கீழே தாங்கள் யோகத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்து வணங்கினேன். அது என்னுடைய இரண்டாவது வணக்கம். இப்போது உமது இருத்தியைக் கண்டு உம்மை வணங்குகிறேன். இது என்னுடைய மூன்றாவது வணக்கம்" என்று கூறி கை கூப்பி புத்தரை வணங்கினார். இதைக் கண்ட மற்றச் சாக்கியர்களும் இவரைக் கைகூப்பி வணங்கினார்கள்.

பாவா நகரத்தில் மள்ள குலத்தில் பிறந்த நான்கு அரசகுமாரர்கள் அவ்வமயம் ஏதோ காரணமாக கபிலவத்து நகரத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் பெயர் கோதிகன், சுபாகு, வல்லியன், உத்தியன் என்பன. அவர்கள் புத்தர் பெருமான் ஆகாயத்தில் நின்று காட்டிய இருத்தியைக் கண்டு வியப்படைந்தார்கள். பிறகு, அவர்கள் பௌத்தமதத்தில் சேர்ந்து சந்நியாசம் பெற்றார்கள். கொஞ்சநாளுக்குப்பிறகு அவர்கள் அர்கந்த நிலையையடைந்தார்கள்.

பிறகு, பகவன் புத்தர் ஆகாயத்திலிருந்து இறங்கிக் கீழே வந்து தமது ஆசனத்தில் அமர்ந்து அங்கு வந்திருந்த மக்கள் கூட்டத்திற்கு வெஸ்ஸந்தர ஜாதகத்தைக் கூறினார். எல்லோரும் கேட்டு இன்பம் அடைந்தார்கள். பின்னர் எல்லோரும் பகவன் புத்தரை வணங்கித் தத்தமது இல்லங்களுக்குச் சென்றார்கள். ஒருவரும் அடுத்தநாள்அரை உணவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால், பகவன் புத்தர் செய்தருளிய உபதேசத்தைக் கேட்டதனால் அவர்கள் மனம் அதிலேயே அழுந்திக் கிடந்தது. அதனால், அவர்களுக்கு அவரை உணவுக்கு அழைக்க நினைவு இல்லாமல் போயிற்று. பகவன் புத்தர் அன்றிரவு சீடர்களுடன் நிக்ரோதா ராமத்திலேயே தங்கினார்.

அடுத்த நாள்பிக்ஷ நேரம் வந்தபோது பகவன் புத்தர் தமது சீடர்களுடன் புறப்பட்டுக் கபிலவத்து நகரத்தில் வீடு வீடாகப் பிக்ஷைக்குச் சென்றார்.நகர மக்கள் தங்கள் தங்கள் மாளிகைகளின் சிங்கபஞ்சரம் என்னும் சாளரங்களைத் திறந்து, "நமது அரச குமாரராகிய சித்தார்த்த குமரன் பிக்ஷைக்காகப் போகிறார்" என்று