இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இணைப்பு - 2
திரிசரணம் (மும்மணி)
பௌத்தர்கள் புத்தர் தர்மம் சங்கம் என்னும் மும்மணிகளை அடைக்கலம் புகவேண்டும். மும்மணிகளுக்குத் திரிசரணம் என்பது பெயர். திரிசரணத்தின் பாலி மொழி வாசம் இது.
புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்கஞ் சரணங் கச்சாமி
துத்யம்பி, புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்கஞ் சரணங் கச்சாமி
தித்யம்பி, புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்கஞ் சரணங் கச்சாமி
இதன் பொருள் வருமாறு:
புத்தரை அடைக்கலம் அடைகிறேன்
தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்
சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்
இரண்டாம் முறையும்
புத்தரை அடைக்கலம் அடைகிறேன்
தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்
சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்
மூன்றாந் தடவையும்
புத்தரை அடைக்கலம் அடைகிறேன்
தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்
சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்