பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 139

இணைப்பு - 4

புத்தர் புகழ்ப் பாக்கள்

1. போதி, ஆதி, பாதம், ஓது!

2. போதி நீழல்
சோதி பாதம்
காத லால்நின்
றோதல் நன்றே!

3. உடைய தானவர்
உடைய வென்றவர்
உடைய தாள்நம
சரணம் ஆகுமே!

4. பொருந்து போதியில்
இருந்த மாதவர்
திருந்து சேவடி.
மருந்தும் ஆகுமே.

5. அணிதங்கு போதி வாமன்
பணிதங்கு பாதம் அல்லால்
துணிபொன் றிலாத தேவர்
பணிதங்கு பாதம் மேவார்.

6. விண்ணவர் நாயகன் வேண்டக்
கண்ணினி தவித்த காதல்
புண்ணியன் இருந்த போதி
நண்ணிட நோய்நலி யாவே.

7. மாதவா போதி வரதா அருளமலா
பாதமே யோது சுரரைநீ - தீதகல
மாயாநெறியளிப்பாய் வாரன் பகலாச்சீர்த்
தாயா யலகிலரு டான்.