54 / புத்தரின் வரலாறு
இந்தப் பரதகண்டம் பாய்போலவும் இமயமலை (மேருமலை) தலையணை போலவும் கிடந்ததது. இந்தப் பாயிலே கௌதம முனிவர் மல்லாந்து படுத்துக்கொண்டிருப்பது போலவும் அவருடைய வலதுகை மேற்கிலும் இடது கை கிழக்கிலும் கால்கள் தெற்கிலும் இருப்பது போலவும் கனவு கண்டார். இந்தக் கனவின் கருத்து என்னவென்றால், போதிசத்துவராகிய கௌதம முனிவர் கட்டாயமாகப் புத்த பதவியை யடைவார் என்பதே.
இவ்வாறு படுத்திருக்கும்போது தம்முடைய நாபியில் (கொப்பூழ்) இருந்து, சிவந்த நிறமுள்ள கம்புச் செடி ஒன்று உயரமாக வானம் வரையில் வளர்ந்து சென்றது போலக் கனவு கண்டார். இந்தக் கனவின் பொருள் என்னவென்றால், ஆரிய (உயர்ந்த) அஷ்டாங்க மார்க்கத்தைத் தாமே கண்டறிந்து அதை மக்களுக்குப் போதிப்பார் என்பது இந்த இரண்டாவது கனவின் கருத்தாகும்.
பின்னர், கருமையான தலையும் வெண்மையான உடலும் உள்ள சிறு பூச்சிகள் கூட்டமாக வந்து இவருடைய கால்நகங்களை மொய்த்துக் கொண்டன. பின்னர் அவை கொஞ்சங்கொஞ்சமாக முழங்கால் வரையிலும் ஏறிவந்து மொய்த்துக்கொண்டன. இந்த மூன்றாவது கனவின் கருத்து என்னவென்றால், இல்லறத்தார் இவரிடம் வந்து இவருடைய உபதேசங்களைக் கேட்டு இவருக்கு உபாசகத் தொண்டர்கள் ஆவர் என்பதாகும்.
பின்னர், நான்கு திசைகளினின்றும் நான்குவித நிறமுள்ள பறவைகள் பறந்து வந்து தம்முடைய காலடியில் தங்கித் தம்மை வணங்கியதாகக் கனவு கண்டார். இதன் கருத்து என்னவென்றால், பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும்நான்கு சாதி மக்கள் இவரிடம் வந்து உபதேசம் பெற்றுத் துறவு கொள்வார்கள் என்பது.
ஐந்தாவது, மலக்குவியலின்மேல் நடந்து சென்றதுபோலவும், ஆனால் கொஞ்சமும் காலில் மலம் ஒட்டாததுபோலவும் கனவு கண்டார். உணவு உடை முதலியன இவருக்குக் கிடைத்தாலும் அவற்றின் மீது இவருக்குப் பற்றுதல் இருக்காது என்பது இந்தக் கனலின் கருத்தாகும்.
கௌதம முனிவர் இவ்விதம் ஐந்துவிதமான கனவுகளைக் கண்டு இவற்றின் கருத்துக்களைத் தாமே ஆராய்ந்து அறிந்துகொண்டார். தமக்குக் கட்டாயம் புத்த பதவி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இவருக்கு உண்டாயிற்று. பின்னர், விடியற்காலையில் எழுந்து