பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 / புத்தரின் வரலாறு

காணலானார். அப்போது இறக்குந்தருணத்தில்இருக்கிற உயிர்களையும், கருவிலே கிடந்து பிறக்குந் தருணத்தில் இருக்கிற உயிர்களையும், நன்மைகளைச் செய்த காரணத்தினாலே இன்பங்களை அனுபவிக்கிற உயிர்களையும், தீமைகளைச் செய்தபடியினாலே துன்பங்களை அனுபவிக்கிற உயிர்களையும் அவர் தமது மனக்காட்சியில் கண்டார். இவ்வாறு உயிர்களினுடைய பிறப்பையும் இறப்பையும் கண்டபடியினாலே, அது பற்றியிருந்த மாயை இவருக்கு இல்லாமற்போயிற்று. பிறப்பு இறப்பைப் பற்றிய மாயை நீங்கிவிடவே பதினாறுவிதமான ஐயங்கள் நீங்கிவிட்டன. இதுவே. இரண்டாவதாகக் கிடைத்த போதிசத்துவருக்கு காம்ஷாவிதரண விசுத்தி ஆகும்.

பிறகு இரவின் கடைசி யாமமாகிய மூன்றாவது யாமம் வந்தது. முன்போலவே போதிசத்துவர் பிராணாயாமம் செய்து யோகத்தில் அமர்ந்து நான்காவது நிலையையடைந்து உண்மைத் தத்துவத்தைக் காண மனத்தைச் செலுத்தினார். அப்போது பஞ்ச ஸ்கந்தங்கள், அநித்தியம், துக்கம். அநாத்மம் என்பவற்றைக் கண்டு. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து, பன்னிரண்டு நிதாளங்களிலே சொல்லுகிறபடி ஏழுலிதமான விசுத்தி மார்க்கத்தைக் கண்டார். இவைகளை மேன்மேலும் ஆராய்ந்து பார்த்து, அநித்திய தரிசனம் மூலமாக நித்தியம் என்னும் பொருளையும், துக்க தரிசனம் மூலமாக சுகம் என்னும் பொருளையும், அனாத்ம தரிசனம் மூலமாக ஆத்ம சஜ்ஞை என்னும் பொருளையும் அறிந்தார். அவ்வாறே ஆராய்ந்து பார்த்து, விராக தரிசனத்தினாலே ராகத்தையும், நிர்விதானு தரிசனத்தினாலே நந்தி (ஆசை)யையும், நிரோதானு தரிசனத்தினாலே சமுதாயத்தையும் பிரதி நிச்சர்க்க தரிசனத்தினாலே ஆதானத்தையும் நீக்கினார்.

பிறகு, எல்லா சமஸ்காரங்களையும் இரண்டாகப் பிரித்து உதயம் (தோற்றம்), விபயம் (அழிவு) என்னும் முறையில் ஆராய்ந்து பார்த்தபோது ஆலோகம், பிரீதி, பிரஸ்ரப்தி, ஞானம், சிரத்தை, ஸ்மிருத்தி, சுகம்,உபேக்ஷை, வீரியம், நிகாந்தி என்கிற விதர்சனா ஞானங்களும் இவற்றினின்று எதிர்மாறான ஞானங்களும் தோன்றின. (விதர்சனா ஞானம் அடைந்தபடியினாலே இவருடைய சரீரத்திலே இருந்த இரத்தம் தூய்மை பெற்று அதிலிருந்து பொன் நிறமான ஒளி வெளிப்பட்டது.)

மேலே சொன்ன ஆலோகம், பிரீதி, பிரஸ்ரப்தி முதலிய விஷயங்களை ஞானத்தினாலே ஆராய்ந்து பார்த்தபோது திருஷ்ணை,