பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 87

கிலேசங்களையும் வென்று அர்ஹந்தநிலையை யடைந்தான். அதாவது, இல்லறத்தை நீங்கித் துறவுகொள்ளும் நிலையையடைந்தார். அப்போது யசகுல புத்திரனைப் பகவர் தனபதி காணும்படிச் செய்தார்.

தன் மகனைக்கண்டு மகிழ்ச்சியடைந்த தனபதி, மகனைப்பார்த்து, "அருமை மகனே! உன்னுடைய தாயார் உன்னைக் காணாமல் அழுது புலம்பிக்கொண்டிருக்கிறாள். நீ வந்தால் அவள்உயிர் பிழைப்பாள். உடனே வா" என்றுஅழைத்தான். யசபுத்திரன் பகவன் புத்தருடைய முகத்தை நோக்கினான். அப்போது புத்தர், "யசபுத்திரன், அர்ஹந்த நிலையை யடைந்திருக்கிறார். அவர் இனி இல்லறத்தில் தங்கமாட்டார்" என்று தனபதியிடம் கூறினார்.

அது கேட்ட தனபதி, பகவன் புத்தரையசபுத்திரனோடு அன்றையத் தினம் தன் இல்லறத்திற்குத் தானத்தின் பொருட்டு வரவேண்டும் என்று வேண்டினான். பகவர் அதற்கு இணங்கினார். பிறகு யசபுத்திரன், பகவன் புத்தரிடம் ஏஹிபிக்ஷுதாவைப் பெற்றுக் கொண்டார்.

முதல் உபாசிகைகள்

பிறகு பகவன் புத்தர் யசபிக்குவுடன் தனபதியின் இல்லத்திற்குச் சென்றார். தனபதி வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்தார். அவ்வமயம் யசனுடைய தாயாரான சுஜாதை என்பவள் மருமகளுடன் (யசனுடைய மனைவியுடன்) வந்து பகவன் புத்தரை வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தாள். அப்போது பகவன் புத்தர் அவர்களுக்குத் தானகாதை, சீலகாதை, சுவர்க்க காதை முதலானவைகளை முறையே உபதேசம் செய்தருளினார். அவ்வுபதேசங்களைக் கேட்டு மகிழ்ந்த அவர்களுக்கு, நான்கு வாய்மைகளை அருளிச் செய்தார். அதைக் கேட்ட அவ்விருவரும் ஸ்ரோதாபத்தி நிலையை அடைந்தார்கள். ஆகவே அவர்கள் மும்மணியைச் சரணம் அடைந்தார்கள். உலகத்தில் முதன்முதலாகத் திரிசரணம் அடைந்த உபாசிகைகள் இவர்களே.

பிறகு அவர்கள் பகவருக்கும் யசபிக்குவுக்கும் உணவு அளித்தார்கள். உணவுகொண்ட பிறகு பகவர் அவர்களுக்கு மோதனா போதனை செய்து தமது விகாரைக்குத் திரும்பினார்.

நால்வர் துறவு

யசபுத்திரனுக்கு வாரணாசி நகரத்திலே நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் விமலன்,சுபாகு, புண்ணியஜித்து, கவம்பதி