பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வண்ணமும் வனப்பும் கொண்டு
வயங்கிடும் மலருங் கூட
நன்மணம் இல்லை யாயின்
நச்சிடார்[1] அதனை யாரும்;
எண்ணமோ தூய்மை இன்றி
இருப்பவர் பகட்டாய்ச் செய்யும்
கண்ணறு செயல்கள் யாவும்
கனவக்குத வாது போகும்.

11


புலர்தலில் நல்லோர் ஈட்டும்
புகழ்மணம் பொன்றா[2] தென்றும்
மலர்தலை உலகம் எங்கும்
மணந்திடும் காலம் வென்றே,
மலர்களின் மணமோ - வல்லே
மறைந்திடு மாறு போல,
உலர்வுறும் மறைத்து தீயோர்
உற்றிடும் போலிச் சீர்த்தி.

12


5.பேதைகள் இயல்


விழத்திருப் பவன் தனக்கு
விடிவுறா திரவு நீளும்;
உழைத்ததால் களைத்தோ னுக்கோ
உறுவழி[3] நீண்டு செல்லும்,
அழித்திடும் அவாவாம் சேற்றில்
அழுந்தியோர்க் குலக வாழ்க்கை
இழுத்திட் முடியாத் தேர்போல்
இரும்பெருஞ் சுமையாய்த் தோன்றும்

13

5

  1. 19
  2. 20
  3. 21