பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இரும்பினால் மரத்தி னாலே
இயற்றுவ தளைகள் ஆகா;
விரும்பிகும் மனைவி மக்கள்
வியனிலம் மணிகள் இன்ன
இரும்பெரும் தளைகள்; தானே
இழைத்திடும் வலையில் சிக்கித்
திரும்பிடாச் சிலந்தி போலத்
திகைக்கலீர்[1] பற்றுள் சிக்கி.

89


ஆர்ந்திடும்[2] செல்வத் தாலே
அழிகிறார் மூட மாந்தர்;
ஓர்த்திடும் அறிஞர் என்றும்
ஒழிந்திடார் செல்வத் தாலே.
சேர்ந்திட நுகர்ச்சி இன்பம்,
சிற்றறி வுடையோர், தம்மைச்
சார்ந்திடும் இனத்தி னோடு
சாலவும் அழித்துக் கொள்வர்.

90


பயிரினைக் களைகள் சுற்றிப்
பற்றியே அழித்தல் போல,
மயர்வுறு காம வேட்கை
மாய்த்திடும் நலங்கள் எல்லாம்.
செயிரு[3] றும் பகைமைப் பண்பு
செறுத்திடும் தனைக்கொண் டோரை.
துயரறப் பற்று நீங்கித்
தூயவர்க் கறமே செய்க.

91

31

  1. 88
  2. 89
  3. 90