பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 121 (பதிச்ச-சமுப்பாதத்தையும், அதைக் காரணமாய்க் கொண்டே உயிர்கள் தோன்றுவதையும் நன்கு தெரிந்து கொண்ட சீடன் தன் இறந்த கால நிலைமையையோ, எதிர் கால நிலைமையையோ, நிகழ்கால நிலைமையையோ எண்ணி ஆராய்ந்து கொண்டிருப்பானா? முன்பு நான் இருந்தேனா? அல்லது நான் இல்லையா? முன்பு நான் எதுவா யிருந்தேன்? முன்பு நான் எப்படி யிருந்தேன் முன்பு நான் எதுவாயிருந்து எதுவாக மாறினேன்?...நான் இனி இருப்பேனா, அல்லது இருக்கமாட்டேனா? எதிர்காலத்தில் நான் எதுவாக இருப்பேன்? எதிர்காலத்தில் நான் எப்படி யிருப்பேன்? எதிர்காலத்தில் எதுவா யிருந்து எதுவாக மாறுவேன்?...இப்போது நான் இருக்கிறேனா, அல்லது இல்லையா? நான் எதுவாக இருக்கிறேன்? நான் எப்படி யிருக்கிறேன்? இந்த நான்' எங்கிருந்து வந்தது: எங்கே செல்லும்? -இத்தகைய வினாக்களை எழுப்பி, உண்மையான ஆரியச் சீடன் விசாரணை செய்து கொண் டிருப்பானா என்பதற்குப் புத்தர் பெருமான் அருளிய மறு மொழி வருமாறு:1 를 ஒருகாலும் இல்லை! அவ்வாறு கடப்பது சாத்திய மில்லை! ஏன் சாத்தியமில்லை? ஏனெனில், ஆரியச் சீடன் தனது கற்காட்சியால், பதிச்ச.சமுப்பாதத்தையும், அதன் காரணமாகவே எல்லாப் பொருள்களும் தோன்றியிருப்பதையும் உண்மையான முறையில் அறிந்திருக்கிறான்.'