பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. ஆன்மா பிக்குகளே! உடல் ஆன்மாவற்றது. பிக்குகளே, உடல் ஆன்மாவா யிருந்தால், இந்த உடல் கோய்க்கு உட்படாது; உடல் சம்பந்தமாக, "என் உடல் இப்படி யிருக்கட்டும், என் உடல் அப்படி யிருக்கட்டும்' என்று சொல்லக்கூடியதாக இருக்கும். பிக்குகளே, உடல் ஆன்மாவற்றதாக இருப்பதாலேயே உடல் நோய்க்கு உள்ளாகின்றது, என் உடல் இப்படி யிருக் கட்டும், என் உடல் அப்படி யிருக்கட்டும்' என்று சொல்ல முடியவில்லை." 崇 ஆதலால் பிக்குகளே, இறந்த காலம், எதிர்காலம். நிகழ் காலம் ஆகிய எக்தக் காலத்திலும் உள்ள எந்த உடலையும் உணர்ந்து கொண்டவன்-அதன் தோற்றத்தைக் கொண்டோ, அதன் துால உருவைக் கொண்டோ, சூக்கும உருவைக் கொண்டோ, அது தாழ்ந்திருந்தாலும், உயர்ந்திருந்தாலும், அது அருகி லிருந்தாலும், தொலைவிலிருந்தாலும், அதை முறை யாகவும் சரியாகவும் உணர்ந்து கொண்டவன், இந்த உடலெல்லாம் என்னுடையதன்று, இது கான் அன்று, ஆன்மா என்னுடையது அன்று' என்று கருத வேண்டும்.24 특 "படைக்கப் பெற்ற யாவும் அகித்தியம்-நிலை யற்றவை. இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை; இதுவே விசுத்தி (பரிசுத்தமான) மார்க்கம்,'