பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 29 அடக்குவதற்கு அரிதாயும், துடிப்புள்ளதாயும், தன் போக்குப்படி திரிவதாயுமுள்ள சித்தத்தை அடக்குதல் கல்லது: அடக்கியாளப்பெற்ற சித்தம் சுகமளிக்கும்.' 를 நிலையில்லாத சித்தத்தையுடையவரும், உண்மை யான தருமத்தை அறியாதவரும், மனத்தின் சாந்தி குழம்பியவரும் பூரண ஞானத்தைப் பெற முடியாது.

  1. பகைவன் பகைவனுக்குச் செய்யும் தீமையைப் பார்க்கினும், கிந்திப்பவன் எதிரிக்குச் செய்யும் திமை யைப் பார்க்கினும், தவறான வழியில் திரும்பிய சித்தம் அதிகக் கேடு விளைக்கும்.'

தாயும், தந்தையும், சுற்றத்தாரும் கமக்குச் செய் யும் உதவியைப் பார்க்கினும் கல்ல வழியில் திரும்பிய சித்தம் அதிக உதவியளிக்கும். கலங்கிய சிந்தனைகளும், உணர்ச்சி வெறிகளும், இன்பத்தில் தேட்டமும் உள்ள மனிதனுக்கு அாை வளர்ந்துகொண்டே யிருக்கும்; அவன் தன் கட்டைப் பலப்படுத்திக் கொள்கிறான்." o o சிந்தனைகளைச் சாந்தப்படுத்துவதில் ாாட்ட முள்ளவன், எப்பொழுதும் விழிப்புள்ளவன், (உலகில்) இன்பமில்ல்ை என்பதில் கருத்தைச் செலுத்துபவன்,