பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 புத்தர் போதனைகள் ஆடவன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை எது வரை அழிக்கப்படாமல் அணுவளவேனும் இருக்கிற தோ, அதுவரை, பால்குடி மறவாத பசுங்கன்று தன் தாயிடம் ஒட்டிக் கொள்வதுபோல், அவன் மனம் (வாழ்வைப்) பற்றிக் கொண்டேயிருக்கும்.' அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டை யில் விரட்டப்பட்ட முயலைப்போல்,ஓடித்திரிகிறார்கள். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு அவர்கள் நெடுங் காலம் துயரத்தை அநுபவிக்கிறார்கள்; இப்படித் திரும்பத் திரும்ப நேரிடுகின்றது.

இரும்பு விலங்கையும், மரக் குட்டையையும், கயிற்றுக் கட்டையும் அறிஞர் பலமான தளை என்று கூறுவதில்லை; ஆனால் பொன்னாலும், இரத்தினங் களாலும் செய்யப்பெற்ற நகைகளிலும், மனைவி யிடத்தும், மக்களிடத்தும் வைக்கும் பாசமே மிகவும் பலமுள்ளது என்பர். ஓ பிக்குகளே! அறநெறிக்கு எதிரான ஐந்து வகை யான தடைகளையும் அறவே நீக்காமலும், அறிவுக்கு விலங்குகளாயுள்ள ஐந்து தளைகளையும் முற்றிலும் உடைத்தெறியாமலும் உள்ள ஒரு பிக்கு, இந்தத் தருமத்திலும் விநயத்திலும் முழுப் பலனை அடைய

  • ஐந்து தடைகள்-அவா, வெறுப்பு, மடிமை, கர்வம், மயக்கம். ஐந்து தளைகள்-உடம்பு உண்மை யென்னும் எண்ணம், சந்தேகம், பயன் கருதிச் செய்யும்விரதங்கள், புலன் இன்பங்களில் விருப்பம், கோபம்.