பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 83 பிக்குகளே! வேட்கையை (அவா அல்லது ஆசையை) அழிப்பதன் மூலம் பெறும் இந்த விடுதலை யைப் பற்றி உங்களுக்கு கான் விளக்கமாகக் கூறி யுள்ளதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்." + (கெள சாம்பி நகரில் கங்கையின் வெள்ளத்திலே மிதந்து சென்றுகொண்டிருந்த பெரிய மரக்கட்டை ஒன்றைச் சுட்டிக் காட்டிப் புத்தர் பெருமான் சிடர் களுக்குச் செய்த உபதேசம்.) பிக்குகளே! இப்பொழுது ஒரு மரக்கட்டை இந்தக் கரையிலோ அந்தக் கரையிலோ சென்று தங்காமலும், கட்டாற்றில் ஆழ்ந்துவிடாமலும், ஒரு திடரில் தட்டி மாட்டிக் கொள்ளாமலும்,மானிடர் கைகளிலோ மற்றவர் கைகளிலோ அகப்படாமலும், சுழலில் சிக்கிக்கொள்ளா மலும், (தானாக) உள்ளுர உளுத்துப் போகாமலும் இருந்தால்,- பிக்குகளே, அந்தக் கட்டை மிதந்து சென்று கடலை அடையும், மெதுவாகக் கடலுக்கே போய்ச்சேரும். கடலை நோக்கியே சென்றுவிடும். ஏன்? ஏனென்றால், பிக்குகளே, கங்கையின் பிரவாகம் கடலுக்கே செல்கின்றது, கடலுக்கே போய்ச் சேரு கின்றது, கடலை கோக்கியே செல்கின்றது. பிக்குகளே! அதைப் போலவே, நீங்கள் இந்த கரையிலோ அந்தக் கரையிலோ தங்காமலும் கட்டாற் றில் ஆழ்ந்துவிடாமலும், ஒரு திடரில் தட்டி மாட்டிக் கொள்ளாமலும், மானிடர் கைகளிலோ மற்றவர் கைகளிலோ அகப்படாமலும், சுழலில் சிக்கிக்கொள்ள மலும் நீங்கள் (தாமாக) உள்ளுர உளுத்துப் போகா மலும் இருந்தால்,-பிக்குகளே, நீங்கள் கிருவானத்தை