பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 97 கிறைந்தே மரிக்கிறான்; கடைசியாக, மரணத்திற்குப் பின் உடல் அழிவுற்றதும், அவன் மனம் துயர நிலை யிலேயே இருக்கும். அவனுடைய கருமம் எங்கே தொடர்ந்து சென்றாலும், அங்கே துக்கமும் துயரமும் இருக்கும். கிருகஸ்தர்களே, இவையே தீவினையாளன் அடையும் ஐந்து வகை கஷ்டங்கள்." இல்வாழ்வோர்களே! சிறந்த ஒழுக்கத்தைப் பேணும் ஒருவன் அடையும் நன்மைகள் ஐந்து வகை யானவை. முதலாவதாக, அந்த கன்மையாளன், ஒழுக்கத்தில் நிலைபெற்று, ஊக்கத்தினால் செல்வத் தைப் பெறுகிறான்; அடுத்தாற்போல, அவனைப் பற்றிய புகழுரைகள் எங்கும் பரவுகின்றன; மூன்றாவ தாக அவன், கூடித்திரியர், பிராமணர், குடும்பத் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் முதலிய எவர்களு டைய கூட்டத்திற்குச் சென்றாலும், அவன் கம்பிக்கை யும் தன்னடக்கமும் கொண்டு விளங்குகிறான்; நான் காவதாக, அவன் கவலையின்றி மரிக்கிறான்; கடைசி யாக மரணத்திற்குப் பின் உடல் அழிவுற்றதும், அவன் மனம் சாந்தி இன்பத்தோடு இருக்கும். அவனுடைய கருமம் எங்கே தொடர்ந்து சென்றாலும், அங்கே சுவர்க்க இன்பமும் சாந்தியும் நிலவும். கிருகஸ்தர்களே, கல்வினையாளன் பெறும் ஐந்து வகை ஊதியங்கள் இவை!"

  • * *

SATTS TTTTTTMeeTAAA AAAA STT ജ

  • மனிதன் மரித்த பின்பு அவன் மனம் சம்பந்தமான லிஞ்ஞானக் கந்தத்தின் துண்ணிய பகுதி ஒன்று எஞ்சி யிருந்து அடுத்தி பிறவிக்குக் காரணமான வினைப்பயனை ஏற்கும் என்பது பெளத்த தருமக் கொள்கைகளுள் ஒன்று.

புத்-7