பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே கடவுள், அவருடையதுதர்களில் கடைசியானவர் முகம்மது நபி என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இத்துடன் இன்னும் நான்கு கடமைகளுண்டு. பிரார்த்தனை, உபவாசங்கள், ஸ்க்காத், ஹஜ், ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைத் தொழுகை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. உபவாசங்களில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் பகலில் எவ்வித உணவோ பானமோ உட்கொள்ளக்கூடாது என்பது. எலக்காத் என்பது தருமம் கொடுத்தல், ஹஜ்' என்பது ஒருமுறையாவது மக்காவுக்கு யாத்திரை செய்தல். இது பொருள் வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பெற்றுள்ளது. மக்கா முஸ்லிம்களுக்குப் புனித நகரம்; நாயகம் பிறந்து வளர்ந்து, அறமுரைத்த தலம் என்பதுடன், அங்கே அவர்களுடைய முதன்மையான கேஷத்திரமான கஅபா இருக்கிறது. மனிதர்களில் ஆண்டான், அடிமை என்ற வேற்றுமைகளில்லை என்பதும், எல்லோருக்கும் ஆண்டான் ஆண்டவனே, எல்லோரும் அவன் ஒருவனுக்கே அடிமைகளென்பதும் இஸ்லாத்தின் கொள்கை. அதன்படி சர்வ ஜனங்களும் சமத்துவமுள்ள சகோதர்களே. உயர்ந்தோர். தாழ்ந்தோரென்ற சாதிப் பிரிவினைகள் அதிலில்லை. மனிதர்கள் தத்தம் செயல்களுக்குத் தாங்களே பொறுப்புள்ளவர்கள். தருமத்தைச் செய்ய வேண்டியதே மக்களின் கடமை; அவற்றின் பலனை ஆண்டவன் நாட்டத்திற்கே விட்டுவிடவேண்டும். இறந்தபின்பு தீர்ப்பு நாளில் மக்கள் உலகிலே செய்த நன்மை தீமைகளுக்குத் தகுந்த வெகுமதியோ, தண்டனையோ அளிக்கப்படும். நன்மை செய்தோர் சுவர்க்கத்தையும், தீமை செய்தோர் நரகத்தையும் அடைவர். உலகைத் துறக்கவோ, உடலை வருத்தும் தவங்களை மேற்கொள்ளவோ இஸ்லாம் கூறவில்லை. மனம் பரி-த்தமாயிருக்க வேண்டும். கருத்தே செயலை விட மேலானது. சிந்தனை, சொல், செயல் மூன்றும் தூய்மையாயிருக்க வேண்டும். மரணத்திற்குப்பின்பு ஏற்படும் முடிவில்லாத ஒரு வாழ்வில் பேரின்பம் பெறுவதே மானிட வாழ்வின் இலட்சியமாயிருக்க வேண்டும். இஸ்லாம் மதத்தின் ஸ்தாபகரமான முகம்மது' கி.பி.571-ல் ரபீயுல் அவ்வல் மீ", 12-ம் தேதி திங்கட் கிழமையன்று, அரபி நாட்டுக் குறைவி வமிசத்தில் பிறந்தவர். அவருடைய சரித்திரம் அரபி மொழியிலும், பிற மொழிகளிலும் குறித்து வைக்கப்பெற்றிருக்கிளறது. உலகில் அவதரித்த

  • ஒவ்வொருவனுடைய செல்வத்திலும் நாற்பதில் ஒரு பகுதியைத் தானம் செய்யவேண்டுமென்று விதி. மற்றும் நன்செய், புன்செய் வருமானங்களுக்கும். வர்த்தகம், தொழில்கள் முதலியவற்றின் வருமானங்களுக்கும் இதேபோல் விகிதங்கள் அமைக்கட் பெற்றிருக்கின்றன.
    • முகம்மது - புகழ்பெற்றவர்.

102 புத்த ஞாயிறு