பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருக்கு அளவற்ற அன்புண்டு. இரண்டு விரல்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருப்பதுபோல், அநாதைக் குழந்தையைப் பாதுகாப்பவனும் நானும் மறுவுலகில் ஒரேயிடத்தில் இருப்போம்' என்று அவர் கூறிவந்தார். இத்தகைய நேர்மையான வாழ்க்கையும், சாந்தியும், சமாதானமும் விளைக்கும் உபதேசங்களும் மக்களைப் பண்படுத்தியதில் வியப்பில்லை. அவர் முயற்சியால் கல்விபெருகிற்று. பல முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கும் சென்று கல்வி பயின்றனர். தாங்களும் கல்வியைப் பரப்பி வந்தனர். நாணயத்திற்கு வட்டி வாங்குதல் விலக்கப்பட்டது. மதுபானமும், சூதாட்டமும் ஒழிக்கப்பட்டன. மனித உருவங்கள், விலங்குகளின் உருவங்கள்கூட வீடுகளில் சித்திரங்களோகவோ, சிலைகளாகவோ இல்லாமல் விலக்கப்பட்டன. வேடங்கள் புனைந்து நாடகமாடுதலும் தடுக்கப்பட்டது. இக்காலத்திய பேசும் படங்களைக் கண்டால் நாயகம் என்ன செய்திருப்பார் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். அவர் காலத்தில் ஏராளமான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தில் சேர்ந்தார்கள். மத விஷயத்தில் எவரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ கூடாதென்பது அவர் கொள்கை. உங்களுடைய ஆண்டவனுடைய பாதையில் எவரையும் அழைப்பதானால், அறிவான வார்த்தைகளாலும், அழகிய போதனைகளாலும் அமையுங்கள். அவர்களுடன் நீங்கள் விவாதம் செய்ய வேண்டியிருந்தால் அழகிய முறையிலே விவாதம் செய்யுங்கள்' என்பது குர்ஆன் வாக்கியம். மனிதர் ஒவ்வொருவரும் தம் செயல்களுக்குத் தாமே பொறுப்புள்ளவர் என்பதை அவர் ஒவ்வொரு சமயத்திலும் வற்புறுத்தி வந்திருக்கிறார். ஒரு சமயம் அவருடைய அருமைப் புதல்வி பத்திமா நாச்சியார், தாம் நாயகத்தின் குமாரி யென்பதால் தமக்கும் அந்த விதியுண்டா என்று கேட்டதற்கு, அவருடைய (பாத்திமாவுடைய) செயல்களைத் த.விர கியாமத்து (தீர்ப்பு) நாளில் வேறெதுவும் அவரைக் காக்க முடியாதென்று நாயகம் கூறினார். ப. ராமஸ்வாமி ை 1 C) Գ