பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலியும் நம் உலகும் அறப்பள்ளியாகவும், அட்டி ற்சாலையாகவும், அருந்துனர் சாலையாகவும் என்று மாறப்போகின்றது பப்ெபிணியால் வாடும் மக்களின் ஒலம் என்று ஒழியும் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் மறைவது எக்காலம் 'மனிதர் நோக மனிதர் பார்த்து மன அமைதியோடு வாழும் கொடுமை மாறுவது எந்நாள்? வறுமையும் பசியும் ஒழியாத உலகிலே, அறியாமை அந்தகாயம் அடர்ந்துள்ள இந்த அடவியிலே, அறம் எப்படி வளரும் பசை யறக் காய்ந்த பாலையில் அருள்துளிர்ப்பது எங்ங்னம்? பசி மக்கள் உள்ளத்தில் நன்மை எதையும் வளரவிடாமல் எரிக்கும் தீ. அது மக்களை அழிக்கும் அழல். பசி குடிப்பிறப்பைக் கொல்லும்; விழுப்பத்தை விழுங்கிவிடும்: கல்வியைக் கைவிடச் செய்யும். நாணை அழிக்கும்; மானி எழிலை யெல்லாஞ் சிதைக்கும், அதனால்தான் தமிழ் மூதாட்டி, 'வையகம் எல்லாம் வயலாய், வானோர் தெய்வமா முகடு சேரியாகக் கானமும் முத்தும் மணியும் கலந்(து) ஒரு கோடானு கோடி கொடுப்பினும், ஒருநாள் ஒரு பொழு(து) ஒருவன் ஊண் ஒழிதல் பார்க்கும் நேர் நிறை நில்லா(து) என்னும் மனனே!" என்று பாடினார், 'கொடிது, கொடிது, வறுமை கொடிது!’ என்று கூவினார். ஐயம் இடுமின், அறநெறியைக் கைப்பிடிமின் என்று அரற்றினார். எனவே, வறுமை உள்ளவரையில் வையத்தில் ஒழுக்கும் ஓங்காது, மந்திர தந்திரங்களால் மக்களின் மனத்தை ஒரளவு மயக்கி வைக்க முடியுமேயன்றி, மலர்ச்சியடையச் செய்ய முடியாது. பேரறிவாளர் பெற்ற திரு ஊருணி நீர் என்றார் வள்ளுவர். இதுகாலைப் புல்லறிவாளர் பெற்ற திரு ஊருணியிற் கலந்த விடமாகவே விளங்குகிறது. - 'அயலெல்லாம் செந்நெல் காய்க்குலை சாயும், அருகெல் லாம்இரை அன்னங்கள் ஆயும், புயலெல்லாம் மலர்ப் பூம்பொழில் தோயும், பொழிலெல்லாம் கனி போகங்கள் ஈயும்.' நம் பூவுலகில், ஒருயிரேனும் உணவில்லையென்று வாடும் வரை, மக்கட் சமுதாயத்தில் நீதியோ நெறியோ இல்லையெனலாம். பசிக்கு அடுத்தபிணி அறியாமை. இருளே உலகத்(து) இயற்கை என்று பாடினார் தமிழ்க்கவிஞர். ஆம், உண்மைதான். 'இருளகற்றும் கை விளக்கே கற்ற அறிவுடைமை யென்றும் அவரே கூறியுள்ளார். கோடி கோடியான மக்களுக்கு நாகரிகம் முதிர்ந்த இந்த நவயுகத்திற்கூட, இந்த விளக்கின் ஒளி கிடைப்பதில்லையே! ப. ராமஸ்வாமி 0 13