பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்வு தாழ்வு கற்பித்தும், உண்மைக்கு மாறுபட்ட இழிவுகள் இன்னோரன்ன பல நிகழ்த்தியுஞ் சமயத்துறைகட்குச் சிலர் சூழ்ந்த கேட்டால், மன்பதை இருளில் மூழ்கி இடுக்கணுற்ற வேளையில், புத்தரென்னும் பெருஞாயிறு தோன்றிற்று. அஞ்ஞாயிறு, அக்கால தேசவர்த்தமானத்துக்கேற்ற வழியில், அறமுறைகள் கோலி, உண்மைமீது படர்ந்திருந்த பனிப்படலத்தை நீக்கிற்று. சுருங்கக் கூறின், சீலம் என்பதன் வழிப் புத்தர் உலகைச் செம்மை செய்தார் என்று கூறலாம்.' புத்தர் தோன்றிய காலத்தில் சாதி சமயங்கள் எந்நிலையிலிருந்தன என்பதை சற்று நோக்கின், அவரால் ஏற்பட்ட மாறுதல்கள் தெளிவாம். அக்கால இந்தியாவின் சமயங்கள் பல இருந்தன; தத்துவ சாஸ்திரங்களும் அனந்தம். எக்காலத்துமே இந்நாடு சமய உணர்ச்சியிற் குறைந்திருந்த தில்லை. 'இந்தியா மதத்தை அளவுக்கு அதிகமாகவே உண்டாக்கி விட்டது என்று ஆசிரியர் லின்-யு.டாங் குறிப்பிட்டிருப்பது உண்மை தான். இன்றைய உலகில் இறைவன், ஆன்மா, பிரபஞ்சம் ஆகியவை பற்றி எத்தனை தத்துவ சாத்திரங்கள் ஏற்பட்டிருக்கின்றனவோ இவையெல்லாம் இந்நாட்டில் பண்டைப் பழங்காலத்திலேயே பரிசீலனை செய்து சித்தாந்தங்களாக வகுக்கப் பெற்றிருந்தன. வேதங்கள், உபநிடதங்களை ஆதாரமாகக் கொண்டு விரிவான சாத்திரங்கள் எழுதப் பெற்றிருந்தன. அவைகளைப் போலவே, பூத வாதம் (உலகாயதம்) பற்றியும் விரிவான ஆராய்ச்சிகள் செய்து முடிக்கப் பெற்றிருந்தன. சாத்திரங்கள் பல ஏற்பட்டதுடன், நாடெங்கும் தத்துவப் போர்களும் நிறைந்திருந்தன. போர்கள் மிகும்போது, உண்மைப்பொருள் நழுவி விடுவது இயற்கை. அதுபோல் உள்ளப் பண்பாடும், உன்னத வாழ்வுக்குரிய நெறியும் மறக்கப் பெற்றுப் பெரும்பாலும் மக்கள் நிழலையே தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அக்காலத்துச் சமயங்களை நான்கு தலைப்புக்களில் குறிப்பிடலாம்: வேத உபநிடதங்களை ஆதாரமாய்க்கொண்ட வைதிக சமயம் (பிராமண மதம்), சமண் சமயம், ஆசீவக சமடம் பூதவாதம். இவற்றுள் சமண் சமயமும் ஆசீவகமும் புத்தர்காலத்திலேயே ஏற்பட்டவை. வைதிக சமயத்தைப் பின்பற்றி யொழுகியவர் அனைவரும் ஒரே தத்துவமும் கொள்கையுமுடையவர் என்று கூறமுடியாது. அவர்களுக்குள் பல பல பிரிவுகள் உண்டு. பிற்காலத்தில், சுமார் 15-நூற்றாண்டுகட்கு அப்பால், இந்த வேற்றுமைகள் இறுகித் தென்னாட்டில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சைவம் என்ற நான்கு தனிப்பெரும் சித்தாந்தங்களாக நிலைபெற்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, வேதாந்த சூத்திரங்களை ஆதாரமாய்க் கொண்டு அவற்றிற்குப் பொருள்

  • சமண் சமயத்தை ஆருகதம், ஜைன மதம் என்றும் கூறுவதுண்டு.

ப. ராமஸ்வாமி ம 15