பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசோக சக்கரவர்த்தி காலத்தில், அதாவது கெளதமர் காலத்திற்குச் சுமார் 200 வருடங்களுக்குப்பின், பெளத்த தருமம் துர தொலைவிலுள்ள பல நாடுகளிலும் திகழ ஆரம்பித்தது. பின்னால் சீனா, ஜப்பான், பர்மா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய ஆசிய நாடுகள் பலவற்றிலும் அது தண்னருள் பரப்பி வந்தது. சேர, சோழ, பாண்டியர் ஆண்டுவந்த தென்னாட்டிலும் புத்தஞாயிற்றின் பேரொளி பல நூற்றாண்டுகளாகப் பரவியிருந்ததைச் சரித்திரத்திற் காணலாம். காஞ்சிக்கு அருகே அசோகர் கட்டிய விகாரை இருந்தது. காவிரிப் பூம்பட்டினம், நாகைப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, வஞ்சிமாநகர், முதலிய பெரிய நகரங்களிலும், பிற ஊர்களிலும் பெளத்த மதம் நன்கு செழித்து வளர்ந்தது. சுமார் ஆயிரம் வருடம் தென்னாட்டில் அது நிலைத்திருந்தது. அறிஞர் கருத்துக்கள் கதிரவனுக்கு ஒரு நாடு, ஒரெல்லை என்றில்லாதது போலவே புத்த ஞாயிற்றுக்கும் தனி நாடு என்பதில்லை. அவர் காலங் கடந்த பெருஞ் சோதி. எனவே அவரது கருணை வெள்ளம் கரை புரண்டோடிக் கண்டங்களை இணைத்துக் கொண்டதில் வியப்பில்லை. உண்மையிலேயே ஒர் உலகப் புரட்சிக்கு அடிகோலியவர் அவர் என்பதை 2,500 வருடங்களுக்குப்பின் இக்காலத்து அறிஞரும் ஆராய்ந்து கூறுகின்றனர். அழிவுப் பாதையில் ஆவேசமாய்ச் சென்று கொண்டிருக்கும் இன்றைய உலகம் கடைத்தேற வேண்டுமானால், மீண்டும் புத்தர் போதித்த அறத்தினைப் பரிசீலனை செய்து, அதை இக்காலத்திற்கு ஏற்ற முறையில் அமைத்துக்கொண்டு வாழ்தலே தக்க வழியாகத் தோன்றுகிறது என்று பேரறிஞர் எச்.ஜி வெல்ஸ் மது உலக சரித்திரத்தில் கூறியுள்ளார். வெளித் தோற்றமான பூத பெளதிக விசாரணையினாலேயே ஒரு மதம், அரச மரத்திற் பிறந்து, ஆலமரம்போல் தழைத்து வேரூன்றி வளர்ந்து, பாரிசாதம்போல் பூத்து, அரிச்சந்தனம் போல் உலகெங்கும் நறுமணம் வீசி, கற்பகம் போல் நிருவான அமிழ்தத்தை வழங்கிய விதம் மிகவும் போற்றத் தக்கதாகும் என்று அறிஞர் திரு. ரைஸ்டேவிட்ஸ் பாராட்டியிருக்கிறார். இவரும் இவருடைய மனைவியாரும் பெளத்த சமய நூல்களைப் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் பெயர்ப்பதில் செய்துள்ள பணியை அளவிட்டுரைத்தல் அரிது. 'இந் நாடு பெருஞ்சோதிகளைத் தான் பெற்றிருந்ததோடு, மற்ற நாடுகளிலுள்ள இருளை நீக்கி ஒளி செய்வதற்கு அவைகளை எடுத்துச் சென்றிருக்கிறது. 2,500 ஆண்டுகட்கு முன் புத்தர் அருளிய செய்தி இந்தத் தேசத்திற்கும், இந்தக் கண்டத்திற்கும் மட்டுமேயன்றி. உலகனைத் ப. ராமஸ்வாமி 0 1