பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வளவு உயர்ந்த சிகரமான வாழ்வை அடைந்தாரோ, அவ்வாறே நாமும் கருமத்தைச் செய்வதன் மூலம் ஆன்மீக நிலையின் உச்சியை அடைய முடியும் என்பதை அவர் நிலை காட்டுகின்றது. கடைசியாகப் புத்தர் பெருமானைப் பற்றிக் காந்தியடிகளின் கருத்தைக் கவனிப்போம்; புத்தருடைய போதனைகளில் முக்கியமான பகுதி இப்போது இந்து சமயத்தின் ஒரு பகுதியாகச் சேர்ந்திருக்கிறது என்பது எனது திடமான அபிப்பிராயம். கெளதமர் இந்து சமயத்திலே செய்த பெரிய சீர்திருத்தத்தை மாற்றி, இன்று இந்து - இந்தியா மறுபடி பின்வாங்கிப் போகமுடியாது. அவருடைய பெருந்துறவினாலும். அப்பழுக்கற்ற அவருடைய தாய வாழ்க்கையாலும் அவர் இந்து சமயத்தில் அழிக்க முடியாத மாறுதலைச் செய்திருக்கிறார். அந்த மாபெரும் குருவுக்கு இந்து சமயமும் நன்றியோடு என்றும் கடமைப்பட்டிருக்கிறது.' புத்தரைத் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகச் சில வைணவ நூல்கள் கூறும். பெளத்த சமயத்தில் பற்றுள்ள பலகோடி மக்களும் அவரை ஓர் அவதார புருடரென்றே கருதுவர். ஆனால் இறைவன் நிலையில் தம்மை உயர்த்தி வணங்கும்படி புத்தர் யாண்டும் கூறியதில்லை; தம்முடனிருந்த அடியார்கூட அவ்விதம் எண்ன அவர் இடம் கொடுக்கவில்லை. மனிதராகவே தோன்றி, மனிதராகவே வாழ்ந்து, மனிதராகவே அவர் முடிவெய்தினார். ஆனால் எத்தகைய மனிதர் எல்லா வகையிலும் ஆச்சரியமான மனிதர் மானிடத் தருவில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கப் ால் ஒருமுறை மலரும் ஒண்மலர்' என்று உலகமே போற்றக்கூடிய மனிதர்! போதி வேந்தரின் அழகு அம்மனிதர் தோற்றத்தில் எப்படியிருந்தார்? மக்களிடம் அவர் எப்படிப் பழகினார்? புத்தர் உயர்ந்த அங்க இலக்கணங்களையெல்லாம் பெற்றிருந்த தாகவே பழைய நூல்கள் கூறுகின்றன. முற்புறத் தோற்றத்தில் அவர் சிங்கம் போலிருந்தார். வனத்தில் தனியே திரியும் அழகிய ஆண் யானைபோல அவர் நடந்து செல்வது வழக்கம். அவர் கால்கள் மானின் கால்களைப் போலிருந்தன. மெல்லிய உடல், தங்க நிறமுள்ள மென்மையான சருமம், தாமரை மலர்போல் மென்மையான தடக் கைகளும், பாதங்களும், நீண்ட விரல்கள், சங்கு போல் உருண்ட கனைக்கால்கள், இந்திர நீலம்போல் இருண்ட தலைமுடி, கருமையான நீலக்கண்கள், பசுவின் இமைகளைப்போல் நீண்டு அகன்ற இமைகள், ப. ராமஸ்வாமி o 2 3