பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கே இடமளித்திருக்கின்றனர், சிற்பிகள் என்று இவ்வதிசயங்களைக் கண்ட கவிஞர் மனமாரப் புகழ்ந்திருக்கிறார். " நாம் வசிக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும், நம் இந்தியக் கலைஞர்கள் புத்தரை மறவாமல் போற்றி வருவதை அவர்களுடைய சித்திரங்கள், சிலைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கலையுலகில் பெரும் புகழ்பெற்ற அபணிந்திரநாத தாகூரும், நந்தலால் போஸ்- ப் பழைய பெருமையைப் புதுக்கியுள்ளார்கள். கிழக்கு வங்காளத்தில் விக்ரம புரியைச் சேர்ந்த திரு.சாரதா உகில் என்னும் சைத்திரிகர் புத்தருடைய பிறப்பிலிருந்து முடிவு வரையுள்ள சரிதையைப் பல வர்ணப்படங்களாக வரைந்துள்ளார். பத்திரிகைகளில் வெறும் கறுப்பு மையில் அச்சிட்ட இவருடைய படங்களே உள்ளத்தை உருக்குந் தன்மை பெற்றிருக்கின்றன. மற்றும் பல சைத்திரிகர்களும் படங்கள் வரைகிறார்கள்; நடிகர்கள் நடிகைகள் பலர்நாடகங்கள், நடனங்கள் மூலம் புத்த சரிதையை மக்களுக்கு அறிவித்து வருகிறார்கள். புத்தரின் செய்தி புத்த ஞாயிற்றின் ஒளி உயிரளிக்கும் அமுதம். மாநில மக்களில் சுமார் மூன்றில் ஒரு பாகத்தினர் அதைப் போற்றி வருவதாகப் பெளத்தர்கள் பெருமையுடன் சொல்லிக் கொள்வர். எனினும் பிறர், துக்கத்தை யெல்லாம் தமதாகக்கொண்டு விளங்கிய பகவரின் அருள் வழியை இக்காலத்து மக்களிற் பெரும்பாலார் இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. அறிவாளரும், கலைஞர்களும், கெளதமரைப் பெரிதும் போற்றுவதுபோல் பொதுமக்களும், தொழில் துறைகளிலுள்ளோரும், முக்கியமாக அரசியல் வாதிகளும்அவர் அருள்மொழிகளைக் கவனித்தல் வேண்டும். இன்று உலகில் பயமும் பாதகங்களும் நிறைந்திருப்பதை அகற்றுவதற்கு அவை உதவி செய்வன. சர்வ மக்களின் சமத்துவமும், சகோதரத்துவமும் படர்ந்து வளர அவ்வுரைகள் கொழுகொம்புகளாக உதவக்கூடியவை. இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய எந்நாட்டு மக்களாயினும் சரி, டில்லி, மாஸ்கோ, பீகிங், வாஷிங்டன், லண்டன் ஆகிய எந்தத் தலைநகரிலுள்ள அரசியல்வாதிகளா

  • ஜாவா யாத்திரை - ரவீந்திரநாத தாகுர் * திரு.ஜே.எம்.மாக்பெயில் 1951-ம் வருடம் வெளியிட்ட தமது புத்த

சரிதையில் கீழ்க்கண்ட கணக்கைக் கொடுத்துள்ளார்: கிறிஸ்தவர்கள் 55.70,00,000 இந்துக்கள் 21.70.O.O.OOO முஸ்லிம்கள் 33.40,00,000 பெளத்தர்கள் 13.70.O.O.OOO கன்பூசிய மதத்தினர்கள் 25,00,00,000 டாவோ மதத்தினர் 4,30,00,000 ப. ராமஸ்வாமி மு 35