பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமசகுனம் முனைப்பாகவுள்ளவர்கள் சற்றுப் பருத்த மென்மையான உடல்களைப் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு உணவிலும், இன்ப வாழ்க்கையிலும் விருப்பம் அதிகம். இராஜச குனம் முனைப்பாகவுள்ளவர்கள் திண்ணிய தசை நார்களோடு சரீரக் கட்டுடையவர்களாயிருப்பார்கள்; அவர்களுக்கு அதிகார ஆசையும், போராட்ட மனப்பான்மையும் அதிகமாயிருக்கும். சத்துவ குணமுள்ளவர்கள் மெல்லிய எலும்புகள், தசை நார்களுடன் மெலிந்த உடல்களைப் பெற்றிருப்பார்கள்; அவர்கள் கூட்டங்களை விட்டுத் தனியேயிருக்க விரும்புபவர், எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பர், ஆத்திரமோ ஆதிக்க வெறியோ இல்லாமல் அடக்கமாயிருப்பர். மக்களின் குணங்களுக்கு ஏற்ற முறையில் சமய நூல்கள் முக்கியமான மூன்று முறைகளைக் குறிப்பிடலாம். அவை பக்தி யோகம், கருமயோகம், ஞானயோகம். தாடிசகுணம், இராஜசகுணம், சத்துவகுணம் பெற்றுள்ளவர்களுக்கு இவை முறையே பயன்படுபவை. பக்தி யோகத்தைக் கடைப்பிடிப்பவன் பக்தி, பிரார்த்தனை, தொழுகைகளின் மூலம் பரம்பொருளை அடைய முயற்சிக்கிறான். கருமயோகி, பயன் கருதாமற்செய்யும் செயல்களின் மூலம் தன்னை நிறைவுள்ளவனாகச் செய்து கொள்கிறான். ஞானயோகி, ஆராய்ச்சியறிவால், பரம் பொருள் 'இதுவல்ல, இதுவல்ல' என்று ஆராய்ந்து, உண்மைப் பொருளைப் பற்றிய மெய்யறிவு பெற முயற்சிக்கிறான். மனிதனுக்கும், பிரபஞ்சம் அல்லது அதன் காரணபூதமான பொருளுக்கும் ஒருவகைத் தொடர்பை அமைப்பது சமயம். இந்தத் தொடர்பால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வது தத்துவ ஞானம். விஞ்ஞானம் உலகப் பொருள்களைப் பிரித்துப் பிரித்து ஆராய்ந்து கூறும் முடிவுகளை ஒன்று சேர்த்துக்கொண்டு, மனிதனும், உயிர்களும், உலகமும் தொடர்பு கொண்டு இயங்குகிற இயக்கத்தையும், இவ்வியக்கத்திற்குக் காரணமான மூல சக்தியையும் பற்றித் தத்துவ ஞானம் ஆராய முற்படுகிறது. மனிதன் உலகத்தோடு கொள்ளும் உறவிலிருந்து அவன் வாழ வேண்டிய ஒழுங்குமுறை-ஒழுக்கம்-எழுகின்றது. இதனாலேயே ஒவ்வொரு சமயமும் தன் கொள்கைகளுக்கேற்ற ஒழுக்க முறைகளையும் கோலியிருக்கிறது. வெறும் தத்துவ விசாரமும், விவாதமும் செய்து கொண்டிருந்தால், அவை குழப்பத்திலேயே முடியும். வாழ்க்கையை முறையாக வகுத்து, ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மெளனமாக அமர்ந்து சிந்தித்துத் தியானம் செய்யும் பழக்கத்தின் மூலமே ஞானத்தை அடைய முடியும்.மேலும் ஏட்டிலும், பாட்டிலும், பேச்சிலும், உபதேசத்திலும் மட்டுமே ஞானம் அடைபட்டிருக்கவில்லை. இவையெல்லாம் ஆரம்பத்தில் வழிகாட்டும் உதவிகளே. வீடுகளையும், ப. ராமஸ்வாமி ை41