பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கராசாரியார் உலகில் தோன்றிய முதன்மையான தத்துவ ஞானிகளில் ஒருவராகப் புகழ் பெற்றிருக்கிறார். அவருடைய வாழ்க்கையும் போதனையும் பிரமிக்கத்தக்கவை. அவர் புதிய சமயம் எதையும் அமைக்கவில்லை; வேதாந்தக் கருத்தையே விளக்கியிருக்கிறார். அவர் காலத்திருந்த ஆறு சமயங்களை அவர் ஆதரித்து உதவி செய்திருக்கிறார். அவர் விளக்கிய சிறப்பான தத்துவம் அத்வைதம் (இரண்டற்றது) என்பது. உலகம், உயிர், பரம்பொருள்-இவை வேறல்ல. பரம்பொருளே தன்னை உலகமாகவும், உயிராகவும் காட்டுகின்றது என்று அவர் விளக்கியதோடு, ஞானமார்க்கத்தின் வழிகளை மிக விரிவாக வற்புறுத்தியிருக்கிறார். இவைகளைப் பார்த்த சிலர், அவர் கருமத்தை கைவிடச் சொல்லியிருப்பதாக எண்ணுவர். ஆனால் அவருடைய உபதேசங்கள் அவ்வாறு கூறவில்லை. "சும்மா உட்கார்ந்திராதே. கருமத்தைக் கைவிடாதே நீ அறியாதவனாயிருந்தாலும், கருமத்தைச் செய்.நீ ஞானியாயிருந்து உண்மைப் பொருளை அறிந்திருந்தாலும், கருமத்தைச் செய்வாயாக!' 'ஒருவர் யோகப் பயிற்சியில், அல்லது உலக இன்பங்களைத் துய்க்கும் வேலைகளில், அல்லது சமுதாயக்கடமைகளில் ஈடுபட்டிருக்கலாம். அத்தகையோரின் இதயம் மட்டும் பிரும்மத்தில் (லயித்து) இன்புறுமானால், அவர் இலட்சியத்தை அடைந்தவராவர். -சங்கரர் ஞானமில்லாமல் கருமம் மட்டும் பயன்படாது, ஞானத்தையிழந்தால் நாசம் என்பதை அவர் வற் த்தியுள்ளார். == த f இராமாநுஜாசாரியார் பிரகாசிக்கச் செய்த சித்தாந்தத்திற்கு விசிஷ்டாத்வைதம்(விசேஷத்தோடு கூடிய அத்வைதம்) என்று பெயர். இறைவன் ஒருவனே; அவனுக்கு உடலாயிருப்பது ஆன்மாவும் பிரகிருதியும், (உலகமென்ற உடலுக்கு அவன் உயிர்), அந்த உடலில் கணக்கற்ற உயிர்த் தத்துவங்களாயிருப்பது ஜீவன். இறைவன் நிறைவெய்திய பூரணன், அதில் தான் ஒர் அம்சமென்று ஜீவன் அறிந்துகொள்ளுதல் முக்தி- இதுவே இந்தச் சித்தாந்தத்தின் அடிப்பை பரம்பொருளும், அதற்கு உடலாக அமைந்த ஆன்மாக்களும் பிரகிருதியும் - மூன்றுமே நித்தியமானவை. இறைவன் யாதொரு தீமையும் கலவாதவனாய், மங்கள குணமுடையவனாய், ஆக்கல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களுக்கும் கருத்தாவாய், எங்கும் நிறைந்தவனாய், எல்லாம் வல்லவனாய், எல்லாம் அறிந்தவனாய் இருக்கிறான். ஆன்மாக்கள் அறிவும் ஆனந்தமுமே வடிவானவை, அவை 11 ம புத்த ஞாயிறு