பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறிவந்ததோடு, வைத்தியத்திலும் அவர் கை தேர்ந்தவர். ஆண்டவனிட பக்தி வெறிகொண்டு பெரியார் பலரைப் போலவே, அவரு வாழ்க்கையில் பல இன்னல்களால் இடருற்றிருந்தார். ஒரு சமய சிறையிலும் இருந்தார். சிறையிட்ட மன்னனே பின்னால் அவருக்( ஒடனானான். அதுமுதல் அவர் சமயம் நாடெங்கும் பரவி வந்த, முடிவில் அவர் கொலையுண்டு இறந்ததாக அவரைப் பற்றிய வரலாறுக கூறுகின்றன. அவர் தொழுதுகொண்டிருக்கையில் கொலைஞ அவரைப் பலி வாங்கியதாகவும், அப்போது அவர் எறிந்த ஜபமான அவன் மேலே பட்டதும் அவனும் இறந்து வீழ்ந்ததாகவு சொல்லப்படுகிறது. கெளதம புத்தர் கி.மு. ஆறாவது நூற்றாண்டிலே இந்திய நாட்டில் சமயக் கிளர்ச்சிக பெரிய அளவில் நிகழ்ந்து வந்தன. புதுச்சமயங்களும் தத்துவங்களு. பிரசாரம் செய்யப் பெற்று வந்தன. முன்னால் ஏற்பட்டிருந்: வேதங்களும், முக்கியமான சில உபநிடதங்களும் ஒரே சமயத்தையு அதற்குரிய திட்டமான தத்துவங்களையும், விதிகளையும் வகுக்கவில்லை. பல முனிவர்கள் கூறிய பாடல்களும், தத்துவங்களும் அடங்கிய களஞ்சியங்களாகவே அவை இருந்தமையாலும் அவைகளிலே பல குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததில் மாறுபாடுகள் இருந்தமையாலும், அவை விவாதங்களுக்கு இடமாயின. வேதங்களை அறிந்தவர்களும் ஒதுபவர்களும் பிராமணர்களாகவே யிருந்தனர் அவர்களே வேதியர். உபநிடதங்களிற் சில கடித்திரியர்களாலே இயற்றப்பட்டவை. பிர, பயனர்கள் அவர்களிடம் சென்று பாடங்கேட்டு வந்தனவரனறும கூறப்பட்டிருக்கிறது. உபநிட்த காலத்தில் சமுதாயத்தில் பிராமணர் பெற்றிருந்த முதன்மையான நிலை சிறிது மாறி, சஷத்திரியர் அந்நிலைக்கு வந்து கொண்டிருந்தனர். எனவே இந்த இரு வகுப்பாருக்குள்ளேயே முக்கியமான போட்டி நடந்து வந்தது. அக்காலத்தில் மற்ற இரு சாதிகளும் அதிகமாய்ப் பெருகியிருக்கவில்லை. பொதுவாக சாதிகள் பிற்காலத்தில் இரும்புச் சுவர்களைப் போல் இறுகிவிட்டதைப் போல் அக்காலத்தில் இருக்கவில்லை. அரசர்கள், பெருஞ் செல்வர்களின் மூலம் பிராமணர்கள் யாகங்களை நடத்திவந்தனர். அஜ.மேதம், அசுவமேதம் முதலிய யாகங்களில் பிராணிகள் வதைக்கப்பட்டன. இவைகளை வதைத்துத் தேவர்களுக்கு அளிப்பதால் மனிதர்கள் செய்த பாவங்கள் கழியுமென்று நம்பப்பட்டு வந்தது. பிராமணர்கள் நிலங்களும், கால்நடைகளும், மற்றைச் செல்வங்களும் பெற்றுச் சுகவாழ்வு நடத்திக்கொண்டிருந்தனர். ப. ராமஸ்வாமி க. 55