பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாவீரர் சமண் சமயத்தின் கடைசித் தீர்த்தங்கரர் என்றும், அவருக்கு முன்னும் அச்சமயம் இருந்து வந்த தென்றும் கூறுவர். அவர் பாடலிபுத்திரத்திற்கு (இக்காலத்துப் பாட்னா நகருக்கு) 27 மைல் வடக்கேயிருந்த வைசாலி நகரைச் சேர்ந்தவர். அவர் துறவு பூண்டு, உடைகளையெல்லாம் கழற்றியெறிந்துவிட்டுத் திகம் பரராகத் தவமிருந்தார். அவர் கண்ட மார்க்கத்தைப் பதினொரு சீடர்களுக்கு உபதேசம் செய்திருந்தார். சுமார் கி.மு. 170 அல்லது 477-ல், தமது எழுபத்திரண்டாவது வயதில், அவர் பாவா நகரிலே காலமானார். அவருடைய சமண் சமயத்தில் படைப்புக்கு ஆதிகாரணமான முழுமுதற் கடவுளுண்மை கூறப்படவில்லை. உலகம் என்றும் இயற்கையாயுளதென்றும், மக்களின் இன்ப துன்பங்களுக்கு அவர்களே காரணமானவரென்றும் அச்சமயம் கூறும். அந்த அடிப்படையில் மக்களின் வாழ்வை உயர்த்தவும், ஒழுக்கத்தை வளர்க்கவும், அறங்களைச் 8ர்திருத்தி அமைக்கவும் அச்சமயம் அரும்பாடு பட்டு வந்தது. பல பிறவிகளெடுப்பினும், நிறைந்த அறிவின் துனையால் இரு வினைகளையும் ஒழித்த உயிரே இறை என்று கருதப்பட்டது. ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாக ஒம்பப்பட்டது. ஒழுக்கத்தில் கொல்லாமையும், அதனடியாக ஜீவகாருண்யமும் முதலிடம் பெற்றன. 'தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில், ஒன்றானும் தானெறி நில்லானேல்-தன்னை இறைவனாகச் செய்வானும் தானேதான் தன்னைச் சிறுவனாகச்' செய்வானும் தான்' என்று அருக சமயத்து அறிஞர் முனைப்பாடியார் கூறுவதுபோல், மனிதன் தன்னை உயர்த்துங்கருவி தானேயாவன். ஒருவன் நன்னெறியில் நிற்கும்போது தெய்வமாகிறான், அந்நெறியில் நில்லாதபோது அவனைவிடத் தாழ்ந்தது வேறில்லை. ஒரு வனது உயர்வுக்கும் தாழ்வுக்கும், மறுமைக்கும் அவனது செயலே காரணமாம். தானே தனக்குப் பகைவனும் நட்டானும், தானே தனக்கு மறுமையும் இம்மையும், தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால் தானே தனக்குக் கரி' ' என்றும் அறநெறிச் சாரத்தில் காணப்படுகின்றது. A. இறைவன் - தலைவன் * சிறுவன் - தாழ்ந்தவன் Jo அறநெறிச்சாரம் JaᏑ கரி - சாட்சி, சான்று ப. ராம ஸ்வாமி o 55