பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானம், காட்சி, ஒழுக்கமாகிய மூன்றையும் துணைக்கொண்டு, இரு வினைகளை நீக்கி, இன்பப் பேற்றையடையும் மார்க்கத்தைச் சமண் சமயம் வலியுறுத்தும். இம்மூன்றையும் குறித்துச் 'சீவக சிந்தாமணி' விளக்கியுள்ளது. - மெய்வகை தெரிதல் ஞானம், விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய் வகையின்றித் தேறல் காட்சி ஐம் பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் சமணத்துறவிகள்ஈ எறும்பு, பூச்சி, புழுக்களுக்குக் கூடத் தீங்கு செய்ய ஒருப்படார். கொல்லா விரதம் குவலயத்தில் ஒங்குவதற்கு அவர்களே மூல காரணராக விளங்கினர். மற்றும் உண்ணாவிரதமிருந்து உடல்களை வாட்டிக் கடுமையான நோன்புகளை அவர்கள் மேற்கொண்டிருந்த வரலாறுகளைப் பல நூல்களிலும் காணலாம். சமணத்தைத் தொடர்ந்து கோசாலி மக்கலி நிறுவிய ஆஜீவக மதமும் அக்காலத்துச் செல்வாக்குப் பெற்றிருந்தது. இவ்விரு சமயங்களின் துறவிகளும் ஆடையின்றி அம்மணமாக இருந்து வந்தனர். ஆஜீவகம் பின்னால் மறைந்தொழிந்தது: ஆனால் சமணம் நெடுநாள் நிலைத்திருந்தது. கெளதம புத்தர் இன்றைக்கு 2,500 ஆண்டுகட்கு முன்னே தோன்றியவராதலால், அவரைப் பற்றிய சரித்திரக்குறிப்புக்கள் போதிய அளவு கிடைக்காமலிருந்தன. அவர் அரச குலத்திலே பிறந்து, இராஜ்யத்தைத் துறந்து, தவம் செய்து, ஞானமடைந்து, எண்பது வருடம் இந்நாட்டில் வாழ்ந்து தரும உபதேசம் செய்து எங்கும் புகழ் பெற்றிருந்ததால், அவரைப் பற்றிய கற்பனைக் கதைகளே அதிகமாயிருந்தன. தெய்வங்களைப் பற்றிய புராணங்களைப் போல், அவரைப் பற்றியும் கதைகள் எழுந்தன. அசுவகோஷ் எழுதிய 'புத்தசரிதை என்ற அழியாப புகழுள்ள காவியமும், பிற சரித்திரங்களும், நாடெங்கும் அமைக்கப் பெற்ற பெளத்த ஆலயங்களும், விகாரைகளும், சேதியங்களும், ஆராமங்களும், பல்லாயிரம் சிற்பங்கள், சிலைகளும் அவருடைய எண்பது வருடத்திய வாழ்க்கையின் உண்மை வரலாறுகளை விவரமாய்த் தெரிந்துகொள்ள அதிக உதவியளிக்கவில்லை. சீனாவில் பெளத்தமதம் பரவியபின் இந்தியாவுக்கு வந்திருந்த பிரபல யாத்திரிகர்களலான ஹாயன்சாங், பாஹியான், இத்-ஸிங் மூவரும் மதித்தற்கரிய சரித்திரக் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த ஆரியர்கள் பக்தி மிகுதியால் புத்தரைப் பரவிப் புகழ்ந்திருக்கின்றனர், A சீவக சிந்தாமணி அருக சமயக்கவிஞர் திருத்தக்க தேவர் இயற்றியது. தத ஞாயிறு