பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர்: நான் மனிதனல்லன். துரோணர்: (பின்னைத்)தாங்கள் யாராயிருக்க முடியும்? புத்தர்: ஆசைகள் முதலிய எந்தத் தீமைகளை அழிக்காமலிருந் தால், என்னை ஒரு தேவனாகவோ, கந்தர்வனாகவோ, யட்சனாகவோ மனிதனாகவோ தனித்துக் குறிக்கும்படி ஏற்படுமோ, அந்தத் தீய தொடர்புகளை நான் முற்றிலும் அழித்து விட்டேன். ஆதலால் அந்தன. நான் புத்தரென்று அறிவாயாக! 'ததாகதரின் இயற்கையே தருமம் அவர் உண்மையிலேயே தருமமாயிருக்கிறார் - என்று 'அக்கண்ண சூத்திரம்' கூறுகின்றது. மக்களின் மனமாசுகளைப்போக்கி, அறியாமை இருளை அகற்றும் பெருஞ் சோதியாக விளங்கிய ததாகதரை மணிமேலை பால சூரியனாக வருணிக்கின்றது: 'உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகிப் பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து அறிவிழந்த வறந்தலை உலகத்து அரும்பாடு சிறக்கச்' சுடர் வழக்கற்றுத் தடுமாறுகாலை'ஓர் இளவள ஞாயிறு" தோன்றியது என்ன அவதரித்ததாகக் கூறுகின்றது. மற்றும் பண்டைத் தமிழ் மக்கள் அவரை எப்படிப் போற்றி வந்தனர் என்பதற்கு அவர்கள் அவருக்கு அளித்துள்ள பல பெயர்களில் சிலவற்றைப் பார்த்தாலே போதும். தருமராஜன், தயாவிரன், நாதன், பகவன், நற்றவமூர்த்தி, அருங்கலை நாயகன், அருளறம், பூண்டோன், அறத்தகை முதல்வன், அறவோன், அறிவன், ஆதி முனிவன், சாந்தன். சாக்கிய முனி, புண்ணிய முதல்வன், புத்த ஞாயிறு, போதிமாதவன், மன்னுயிர் முதல்வன் முதலிய சிந்தைக்கும் செவிக்கும் இனிய பெயர்களை அவருக்குச் சூட்டியிருக்கின்றனர். அவரை வருணிக்கையில், 'சினந் தவிர்ந்தோன் என்றும் தீமொழிக்கு அடைத்த செவியோன்' என்றும் துறக்கம் வேண்டாத் தொல்லோன்' என்றும் பிறவிப்பிணி

  • பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து-நற்பொருளைச் செவியால்

கேட்கும் திறனை இழந்து

  • வறந்தலை உலகத்து அரும்பாடு சிறக்க-அறிவில் வறுமையுற்ற உலகத்தில்

தருமம் நன்கு விளங்க $ சுடர் வழக்கற்றுத் தடுமாறு காலை (சுடர்-சூரியன்) சூரியன் தோன்றாது. எப்போதும் இருள் நிறைந்து. எல்லாம் தாறுமாறாக மயங்கும்போது $$ இளவள ஞாயிறு - பாலசூரியன் 66 புத்த ஞாயிறு