பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவர்ந்தன. ஆயிரக்கணக்கான பாமர மக்களும் அவரிடம் பக்தி பூண்டு அவரையே சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவரை எப்படியாவது கபில வாஸ்துவுக்கு அழைத்துவந்து தம் கண்ணால் ஒருமுறை காணவேண்டுமென்று அவர் தந்தை விரும்பினார். அதற்காக எத்தனையோ தூதர்களை அனுப்பினார். மந்திரிகளை அனுப்பினார். சென்றவர் எவரும் தலைநகருக்கு மீளவேயில்லை. படாடோபத்துடன் சென்றவர்கள் புத்தரின் பாதத்தடியில் அமர்ந்து பாடங் கேட்டுக்கொண்டிருந்தனர். அவரை அழைத்துவரச் சென்ற மந்திரிகள், தலைகளை முண்டிதம் செய்துகொண்டு, குதிரைகள் வாங்கச் சென்ற மணிவாசகப் பெருமானைப்போல, மரங்களின் நிழலில் தியானம் செய்துகொண்டிருந்தனர். கடைசியாக மன்னர் சுத்தோதனர் புத்தரின் தோழனான உதாயி என்பவனை அனுப்பினர். அவன் அவர் முன்பு செல்லுமுன்பே, அவருடைய நல்லுரைகள் செவிகளிற் புகாதவாறு இரு செவிகளிலும் நன்றாகப் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டான். அதனால் அவன் மட்டுமே மன்னருடைய செய்தியை அவருக்கு அறிவிக்க முடிந்தது! அவ்வளவு வசீகர சக்தியை அவருடைய வாய்மொழி பெற்றிருந்தது! புத்தியால் எதையும் பரிசீலனை செய்தே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று புத்தர் போதித்து வந்தபோதிலும், தத்துவ நூல் ஆராய்ச்சிகளை அவர் ஆதரிக்கவில்லை. விவாதம், விவாதமென்று, இருக்கிற சொற்ப வாழ்நாளையும் தருக்கத்திலும் தத்துவ ஆராய்ச்சியிலுமே கழித்துக் கொண்டிருந்தால், வாழ்க்கையில் எதையும் செய்ய முடியாமற் போகும். எளிதிற் கண்டுபிடித்த உண்மைகளைக் கடைப்பிடிக்க முடியாமல், வாழ்நாள் முழுவதும் உண்மையைத் தேடிக் கொண்டிருத்தல் வாழ்க்கையை வீணாக்குவதாகுமென்று அவர் கருதினார். அறிவுக்கு எட்டாத வெடிமங்களைப் பற்றி அவரிடம் கேட்டால், அவர் பதில் சொல்வதில்லை. ஆன்மா, பரமான்மா, மரணத்தின் பின் மனிதர் நிலை முதலிய விஷயங்களைப் பற்றிக் கேள்விகள் கேட்டால், அவர் அவையெல்லாம் அறிவுப் பெருக்கத்திற்கோ, ஒழுக்க வளர்ச்சிக்கோ உகந்த கேள்விகளாயில்லை யென்று ஒதுக்கிவிடுவது வழக்கம். மேலும் அவர் காலத்தில் நிகழ்ந்து வந்த முடிவில்லாத விவாதங்ககளின் நடுவே, அவர் கற்பனைக் கனவுகளில் தாம் மனத்தைச் செலுத்தாமலும், மற்றவர்கள் அவ்வழியே திரும்பாமலும் கவனித்து வந்தார். உமியைக் குற்றினால் கைதான் சலிக்கும்; தத்துவப் போர்களின் முடிவும் இதுபோல்தான். 'குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக் குருடும் குருடும் குழிவிழு மாறே 68 ம புத்த ஞாயிறு