பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும்? எருக்குழி மண்ணால் எழுப்பிய சுவருக்கு எப்படி வெள்ளையடிக்க முடியும்?' என்று அவர் பரிதவித்தாராம் காங்-சி என்ற பிரபு ஒருவர், நாட்டில் திருடர் பயமிருப்பதைக் கண்டு, கன்பூஷலிடம் ஒரு சமயம் யோசனை கேட்டார். நீங்களே பணத்தில் ஆசை வைக்காமலிருந்தால், ஜனங்கள் திருட மாட்டார்கள்; திருடுவதற்கு நீங்கள் பரிசு கொடுப்பதானாலும், அவர்கள் செய்ய மாட்டார்கள்!' என்று கன்பூவுஸ் கூறினார். அவர் கூறியுள்ள உபதேசங்களில் மற்றும் சில வருமாறு: 'தனக்குத் தெரிந்தது இது. தெரியாதது இது என்று தெரிந்துள்ளவனே அறிவாளி. என்ன செய்யவேண்டும்? என்ன செய்ய வேண்டும்?' என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ளாத மனிதனை என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை." "பணக்காரனாயிருந்து கர்வமில்லாமலிருப்பது எளிது; ஏழையிருந்து முனகாமலிருப்பது கஷ்டம். 'கண்ணியமான கனவான் தன்னைத்தான் குறை சொல்லிக் கொள்வான். சாதாரண மனிதன் பிறரைக் குறை சொல்வான்.' மேலான மனிதன் தன் ஆன்மாவை நேசிப்பான் தாழ்வான மனிதன் தன் சொத்தை நேசிப்பான்.' இத்தகைய உரைகளைக் கேட்டு வாழ்க்கையிலும் அவைகளையே பின்பற்றி வந்த சீன மக்கள் கன்பூவுளை ஞான முனிவராகவும், நல்லாசிரியராகவும், சீர்திருத்தவாதியாகவும் போற்றி வருவதில் ஆச்சரியமில்லை. அவர் கூறிய சீர்திருத்தக் கருத்துக்களிற் சில இக்காலத்திய உலகில் சமுதாய வாழ்வைப் பற்றிய கருத்துக்களுக்கும் முற்போக்கானவை. அவர் பெயரால் ஒவ்வொரு நகரிலும் ஆலயங்கள் அமைத்திருக்கின்றனர். அவருடைய சமாதி இன்று வரை சீனாவின் முதன்மையான புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. லாவோத்ஸேயும், கன்பூவுலாம் ஞானம் புகட்டிய நாட்டிலே, பின்னால் இந்தியாவிலிருந்து சென்ற பெளத்த தருமம் பரவி நிலைத்து விட்டது. கோடிக்கனக்கில் மக்கள் புத்தர் பிரானுடைய அருட் சமயத்தைப் பின்பற்றி வரினும், அவர்கள் தங்கள் ஆசிரியர்கள் இரு வரையும் மறக்கவேயில்லை. எனவே சீனாவிலுள்ள பெளத்தம் லாவோத்ஸே, கன்பூஷஸ், புத்தர் ஆகிய மூவருடைய பொன்மொழிகளும் ப. ராம்ஸ்வாமி - G 1 پیٹ: ۔ ----- - - ---+ ,* ,** ניו:".