பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிந்து கொள்ளவும் முடியாது. அறிவைப் பெருக்கிக் கொள்ளும் முறை. அந்த அன்பு போதிய அளவு சுயநலமின்றியும், தீவிரமாயும் இருந்தால், நாம் பெறும் அறிவு ஐக்கியப்பான்மையை வளர்க்கும் அறிவாகிறது. இதனால் அதில் தவறு இருக்கமுடியாமற் போகிறது." இதனால்தான் அன்பு மெய்யறிவுக்கு உற்ற துணையாகவும், உயிர்களின் ஐக்கியத்திற்கும், உயிர்-உலகு இறை ஐக்கியத்திற்கும் வழிகாட்டும் கருவியாகவும் கொள்ளப்படுகிறது. அன்பின் அரும்பிலிருந்துதான் தருமம் மலர்கிறது. ஏக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் பாலஸ்தீனத்தில் யூதர் வகுப்பில் அவதரித்தார். அவருடைய அன்னை மேரி, தந்தை ஜோஸ்ப். அக்காலத்தில் யூதர்களுடைய ராஜ்யம் 'இஸ்ரேல்', 'ஜ'டர் இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. யூதர்கள், புத்தர் தோன்றிய சாக்கிய வகுப்பினரைப்போல், குலப் பெருமையில் கர்வமுள்ளவர்கள், செல்வாக்குள்ளவர்கள், உலக சரித்திரத்தில் அவர்களைப் போல் துன்புற்ற வேறு வகுப்பினரில்லை. ஆதியில் அவர்களுக்கு அறமுரைத்த பெரியார் மோசே (Moses), பின்னால் ஏசுநாதர் தோன்றிப் பிரசாரம் செய்த புதிய தருமத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து, அவரையும் ஒதுக்கித் தள்ளியதிலிருந்து, அவர்கள் துயரம் பன்மடங்கு பெருகிவிட்டது. நாடிழந்து, நலமிழந்து, வந்தவர் போனவர்க்கெல்லாம் அடிமைகளாகி, அவர்கள் எப்போதுமே துன்பக் கடலில் மிதப்பவர்களாயிருந்து வருகின்றனர். ஆயினும், தங்களுடைய வகுப்பைப் பற்றிய பெருமையும், ஆண்டவனருளால் தாங்கள் ஒரு காலத்தில் உலகில் முதன்மையுற்றிருப் பார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை விட்டு அகலவேயில்லை. ஏசுநாதர் காலத்தில் அவரது நாட்டிற் பெரும்பகுதி ரோமாபுரச் சக்ரவர்த்தியான டைபிரியஸ் ஸிலருக்கு அடிமைப்பட்டிருந்தது. nஸரின் பெயரால் பாண்டியஸ் பைலேட்(பிலாத்து) என்பவர் ஆண்டு வந்தார். ஏசு தமது முப்பதாவது வயதிலேதான் தமது கொள்கையைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். மற்றைத் தீர்க்கதரிசிகளைப்போல், அவர் நெடுங்காலம் வாழ்ந்து, பல்லாண்டுகள் பிரச்சாரம் செய்யவில்லை. மக்களுக்கு அவர் அறமுரைத்த காலம் மூன்று ஆண்டுகளே. அவருக்குச் சீடர் பன்னிருவரே இருந்தனர். ஞானத்தில் அவர்கள் ஆசிரியரைவிடப் பன்மடங்கு தாழ்ந்த படியிலிருந்தனர். ஆசிரியராக விளங்கிய ஏசு, சமயத்திலும் சமுதாய வாழ்விலும் புரட்சிகரமான மாறுதலைச் செய்ய முயன்றதில், அவருடைய செய்திகளை அந்தச் சீடர்கள் கூடத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு, இன்றைக்குக்கூட அப்பெரியார் நம் 'சின்ன உள்ளங்களுக்கு ' 7r A/dows Huxley - Perennia/Philosophy' 94 புத்த ஞாயிறு