பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாதவராகவே யிருப்பதில் வியப்பில்லை யென்று ஆசிரியர் எச்.ஜி.வெல்ஸ் குறிப்பிட்டுள்ளர். ஏக மக்களிடையே பரம ஏழையாகவே வாழ்ந்துவந்தார். சாதாரண மக்களுக்குப்புரியக்கூடிய சிறு சிறு கதைகள், உபமானங்களைக் கூறித் தமது தருமத்தைப் போதித்து வந்தார். கடைத்தெரு, கோயில், கடற்கரை, குன்றுகள் முதலிய இடங்களில் நின்றுகொண்டு, அவர் திரள் திரளான மக்களுக்குப் போதித்தார். புத்தரைப்போல், மக்களைத் தம்மிடம் இழுத்துக் கொள்ளும் கவர்ச்சி அவரிடம் அளவற்ற முறையில் அமைந்திருந்தது. ஏழைகள் ஒதுக்கப்பட்டவர்கள், பிணியாளர்கள் முதலிய யாவர்க்கும் அவர் ஆறுதல் கூறினார்: பல பிணியாளர்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். மக்கள் நேசப்பான்மையுடன் வாழ வேண்டுமென்றும், வாளெடுத்தவர் வாளாலேயே மடிவரென்றும், அன்பே கடைத்தேறுவதற்குரிய தெப்பமென்றும் தாம் விரும்பாததை மற்றவர்களும் விரும்பலாகா தென்றும், தீமையை எதிர்த்தல் கூடாதென்றும், கொடுமை செய்தோரைக் கருணையால் அனைத்துக் கொள்ள வேண்டுமென்றும், குழந்தைகள் போல் சூது வாதற்றவர் களுக்கே முக்தியாகிய பரமண்டலம் கிட்டுமென்றும், ஆண்டவனின், பரம ராஜ்யத்தை இவ்வுலகிலேயே - இப்போதே - அமைக்க முடியுமென்றும் அவர் உபதேசித்தார். ஊசியின் துவாரத்தில் ஒட்டகை துழைய முடியாததுபோல், செல்வர்கள் பரமண்டலத்துள் நுழைய முடியாது என்றார். 'ஒவ்வொருவனும் தன் சொந்த முயற்சியால் இறைவனின் இராஜ்யத்தை அடைய முடியும். ஏனெனில் அந்தப் பரமராஜ்யம் உங்களுக்குள்ளேயே (அகத்தில்) இருக்கிறது என்று கூறினார். 'உழைத்துக் களைத்திருப்பவர்களும், பெரும்பாரங்களைச் சுமப்பவர்களும், எல்லோரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு ஒய்வு தருகிறேன்! என்று அவர் சாதி, சமயம் , குலம் முதலிய வேற்றுமைகளின்றி எல்லோரையும் விரும்பியழைத்தார். ஏசுநாதரின் அறவுரைகளிற் பலவற்றை வேறு சமய நூல்களிலும் காணலாம். ஆயினும் அவர் தமக்கே உரிய பாணியில், கல்லையும் கனிவிக்கும் கருணை நிறைந்த சொற்களால், ஆணித்தரமாக அவைகளைக் கூறினார். துறவிக்கு வேந்தன் துரும்பு என்பதுபோல், அவர் அரசர்களுக்கு அஞ்சவில்லை. தம்மை எதிர்த்து நின்ற தம் இனத்தாரான குருமார்களுக்கும் அஞ்சவில்லை. தமது பிரச்சாரத்தால் குருமார்களின் கொடும்பகை ஏற்படுமென்று தெரிந்திருந்தும், அதன் முடிவு எதிலே கொண்டு சேர்க்குமென்று அறிந்திருந்தும், அவர் துணிந்து எருசலேம் நகருக்குட் சென்று பிரசாரம் செய்தார். ப. ராமஸ்வாமி o 95