பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தீமையை தீமையால் எதிர்க்காதீர்கள்! ★ ★ பொறியிலே சிக்கிய தன் பாதத்தை நரி கடித்துத் துண்டாக்கித் தப்பித்துக் கொள்வதுபோல, ஒவ்வொரு மனிதனும் ஆசைத் தூண்டுதலுக்குப் பணிவதைப் பார்க்கினும், தன் உடலின் வேதனையைத் தாங்குதல் நலமாகும். தீமைக்கு இடங்கொடுத்து, அதையே விரும்பக்கூடிய அளவுக்கு வருவதைப் பார்க்கினும், ஒரு கையோ, பாதமோ மட்டுமின்றி, உடல் முழுதுமே அழிந்துபோதல் நலம். ஆசைத்துண்டுதல்களே உலகுக்குத்துக்கத்தை அளிக்கின்றன. ஆசையின் துண்டுதலாலேயே உலகில் எல்லாத் தீமையும் வருகிறது.'

  • As

'ஒரே காலத்தில் நீங்கள் இரண்டு யசமானர்களுக்கு ஊழியஞ் செய்ய முடியாது; கடவுளும் செல்வமும், பரமபிதாவின் சித்தமும் உங்கள் எண்ணமுமே(அந்த இருயசமானர்கள்). இரண்டில் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு அல்லது மற்றவருக்கே ஊழியம் செய்ய வேண்டும்.' புத்தர் தம் 61 சீடர்களை முதன்முதலில் தருமப்பிரச்சாரத்திற்கு அனுப்புகையில் அவர்களுக்கு ஒர் அரிய உபதேசம் செய்தார். 'பல பேர்களுடைய நன்மைக்காக, பல்லோருடைய இன்பத்திற்காக உலகின் மீது கொண்ட கருணையுடன் - தேவர்கள், மானிடர்கள் எல்லோருடைய rேமத்திற்காகவும், நன்மைக்காவும், இன்பத்திற்காகவும், சகோதரர்களே, நீங்கள் உங்கள் யாத்திரையை மேற் கொள்ளுங்கள்! இரண்டு பேர்கள் சேர்ந்து போகாதீர்கள். தொடக்கக்கிலம், நடுவிலும் முடிவிலும் நலம் நிறைந்துள்ள தருமத்தைப் பிரச்சாரம் செய்யுங்கள்... மக்கள் கண்களில் இந்திரிய உணர்ச்சியென்ற மாசு (மண்) சிறிது மறைத்து நிற்கிறது. தருமத்தை அறியாமல் அவர்கள் நசித்துப் போகிறார்கள். (உண்மையைச்). சிலராவது உணர்ந்து கொள்வர்' என்று அவர் சொல்லியனுப்பினார். ஏசுநாதர் தம் 12 சீடர்களுக்கும் சொல்லியனுப்பிய செய்திவருமாறு: 'அநேக மக்கள் உண்மையான வாழ்க்கையின் இன்பத்தை அறியாதிருக்கின்றனர். அவர்கள்.அனைவருக்குமாக நான் இரங்குகிறேன், எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன். ஒரு யசமானன் தன் வயலில் தனியே வேலை செய்ய முடியாமல், அறுவடைக்குத் தொழிலாளர்களை அழைப்பதுபோல, நான் உங்களைத் துணைக்கு அழைக்கிறேன். வெவ்வேறு நகரங்களுக்குச் சென்று, எங்கும் பரம ராஜ்யத்தைப் பற்றிய உபதேசத்தைச் சொல்லுங்கள். பரம 98 புத்த ஞாயிறு